Thursday, 30 November 2017

ஒரு ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவு    


  

ஒரு ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்தது.

ஒரு ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1917-ம் ஆண்டு நவம்பர் 30-ந் தேதி, ஒரு ரூபாய் நோட்டு அறிமுகம் ஆனது. அதற்கு முன்பு ஒரு ரூபாய் வெள்ளி நாணயமே புழக்கத்தில் இருந்தது. முதலாவது உலகப்போரின்போது, வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், நாணயத்தை அச்சிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதனால், அப்போதைய வெள்ளி நாணய படத்தையும், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் புகைப்படத்தையும் தாங்கி ஒரு ரூபாய் நோட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. அதன்பிறகு, அவ்வப்போது அச்சிடும் பணி நிறுத்தப்படுவதும், வடிவமைப்பு மாற்றப்படுவதுமாக ஒரு ரூபாய் நோட்டு நூற்றாண்டு கண்டுள்ளது.

மற்ற நோட்டுகளை போல இதை ரிசர்வ் வங்கி வெளியிடுவது இல்லை. மத்திய அரசே வெளியிடுகிறது. அதனால்தான், இந்த நோட்டில், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்துக்கு பதிலாக, மத்திய நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இடம்பெற்று இருக்கும்

No comments:

Post a Comment