Thursday 30 November 2017

2ஆம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.3% வளர்ச்சி

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2017 ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டில்6.3% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரிக்கு பின்னர் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவை சந்தித்திருந்தது. இதனால் 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக இருந்தது. இந்த வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவாகும். இதனால் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும் மத்திய அரசை பெரும்பாலும் விமர்சித்து வந்தனர்.

இதையடுத்து ஜி.எஸ்.டி வரியில் மத்திய நிதித்துறை பல்வேறு மாற்றங்களையும், திருத்தங்களையும் கொண்டு வந்தது. பல பொருட்களின் வரி கணிசமாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள, நாட்டின் 2ஆம் காலாண்டின் பொருளாதார வளர்ச்சியின் அளவு 6.3% ஆக உயர்ந்துள்ளது. முதல் காலாண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த வளர்ச்சி 0.6% அதிகமாகும்

`தீரன் அதிகாரம் ஒன்று' படத்தைப் பார்க்கணும்னா ரூ.50,000 கொடுக்கணும்' - வழக்கு தொடர்ந்தவரை அதிரவைத்த நீதிபதி

`தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தைப் பார்க்க நியமிக்கப்படும் இரண்டு வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை மனுதாரர் ஏற்றுக்கொள்வாரா என்பது குறித்து தெரிவிக்க மனுதாரரின் வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த பசும்பொன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ``திரைப்பட நடிகர் கார்த்தி நடித்த `தீரன் அதிகாரம் ஒன்று' என்ற படம். இத்திரைப்படம் தமிழகத்தில் சீர்மரபினர் பட்டியலில் உள்ள 235 பிரிவு சமுதாயத்தினரைத் தவறாகச் சித்திரித்தும் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தில் குற்றப் பரம்பரை என்ற வார்த்தை இடம் பெறுகிறது. இந்த வார்த்தை பல இடங்களில் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகன் ராஜஸ்தான் காவலர்களிடம் குற்றப் பரம்பரைச் சட்டம் பற்றிக் கூறுகிறார். மேலும், கதாநாயகன் குற்றப் பரம்பரையின் வரலாறு என்ற தமிழ்ப் புத்தகத்தைப் படிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதுவும் தவறானது. மேலும், தமிழகத்தில் உள்ள வேட்டைக்காரன் சமுதாயத்தினரைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஆகவே, திரைப்படச் சட்டம் 1952-ன் படி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை அவதூறு பரப்பும் வகையில் திரைப்படங்கள் வெளியிடப்படக் கூடாது. எனவே, தீரன் திரைப்படத்தில் உள்ள சமுதாயத்தை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்கும் வரை இந்தப் படத்துக்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டும். இந்த படத்தில் கிடைக்கும் 50 சதவிகித பணத்தை சீர்மரபினர் சமூக மேம்பாட்டுக்காகச் செலவிட உத்தரவிட வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி மகாதேவன், நான் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கவில்லை. திரைப்படத்தைப் பார்க்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்தப் படம் 6 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு திரையிடப்பட்டுள்ளது. எனவே, இந்தப் படத்தைப் பார்த்து அது குறித்த அறிக்கை சமர்பிக்க 2 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மனுதாரர் அவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தச் செலவை மனுதாரர் ஏற்றுத்கொள்வாரா என்பதை மனுதாரரிடம் கேட்டுத் தெரிவிக்க மனுதாரரின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

24 வயதில் 18 வழக்குகள்! - வடசென்னை விஜியின் கதை

சென்னையில் நேற்று (29.11.2017) பட்டப்பகலில்   ரவுடி விஜியைக் கொலை செய்த கும்பல், ரத்தம் படிந்த கத்தி, அரிவாளுடன் சர்வசாதாரணமாக சாலையில் நடந்துசெல்கின்றனர். சினிமா படப்பிடிப்பு என்று முதலில் கருதிய அப்பகுதி மக்களுக்கு, அது நிஜம் என்றதும் உள்ளுக்குள் உதறல் ஏற்பட்டிருக்கிறது.  

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, பல்லவன் நகரைச் சேர்ந்தவர் விஜி என்ற விஜயகுமார். 24 வயதாகும் இவர், காசிமேடு பகுதியில் படகு பழுதுபார்க்கும் வேலை செய்துவந்தார். அதன்பிறகு கஞ்சா சப்ளை செய்துவந்தார். அப்போது, வடசென்னையைக் கலக்கிவரும் பிரபல ரவுடி ஒருவருடன் விஜிக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் அவருக்கு கூலிப்படையாக செயல்பட்ட விஜி, அதன்பிறகு ரவுடி சாம்ராஜ்ஜியத்தில் கால்பதிக்கத் தொடங்கினார். 

கழுத்து நிறைய செயின்களுடன் லோக்கல் தாதாவாகவே விஜி செயல்பட்டுள்ளார். கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், கொலை முயற்சி என பல வழக்குகள் அடுத்தடுத்து அவர் மீது பாய்ந்தன. வடசென்னை ரவுடிகளின் பட்டியலில் விஜியின் பெயர் இடம்பெற்றது. இதனால் போலீஸாரின் ரகசிய கண்காணிப்பு வளையத்துக்குள் விஜி இருந்துவந்தார்.

பிரபல கஞ்சா வியாபாரி ஒருவரின் உருவத்தை உடலில் பச்சை குத்தியபடி வடசென்னையில் வலம் வந்துள்ளார். எப்போதும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். வழக்குகள் தொடர்பாக காவல்நிலையம், நீதிமன்றம் என அலைந்துகொண்டிருந்த விஜியின் வளர்ச்சியைப் பிடிக்காமல் எதிரிகளும் உருவாகினர்.

இந்தச் சூழ்நிலையில்தான் பாரிமுனையில் உள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு வந்தார் விஜி. விசாரணை முடிந்து வீட்டுக்குத் தனியாக அவர் சென்றுகொண்டிருந்தார். மண்ணடி, தம்புசெட்டி தெருவில் சென்றபோது 6 பேர் கொண்ட கும்பல், விஜியை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. அவர்களிடமிருந்து தப்பிக்க விஜி ஓடினார். ஆனால், அந்தக் கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டிச் சென்றபோது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்குள்ள ஒரு வீட்டுக்குள் விஜி புகுந்தார். அப்போதுகூட விடாமல் அந்தக் கும்பல் விஜியை வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.

ரத்த வெள்ளத்தில் மிதந்த விஜியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸார், விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமரா பதிவுகளைப் போலீஸார் ஆய்வுசெய்தனர். அதில் விஜியைக் கொலை செய்த சம்பவங்கள் பதிவாகியிருந்தது. அவரை வெட்டியவர்களின் முகங்களும் பதிவாகியுள்ளன. அவர்கள் யார், எதற்காக விஜியைக் கொலை செய்தார்கள் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "விஜி மீது 18 வழக்குகள் வரை உள்ளன. அவர் நீதிமன்றத்துக்கு வரும் தகவல் முன்கூட்டியே கொலையாளிகளுக்குத் தெரிந்துள்ளது. இதனால் திட்டமிட்டப்படி அவரை வெட்டிக் கொன்றுள்ளனர். வீடியோவில் பதிவான காட்சிகளைப் பார்க்கும்போது, பட்டப்பகலில் சர்வசாதாரணமாக விஜி கொல்லப்படுவது தெரிகிறது. விஜியைக் கொலை செய்தவர்களுக்கு 25 வயதிலிருந்து 30 வயதுக்குள்தான் இருக்கும். அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களுக்குள் ஓடிவந்து விழும் விஜியை விடாமல் அந்தக்கும்பல் வெட்டுகிறது. அப்போது, ஒரு வீட்டுக்குள் தஞ்சமடைகிறார். அங்கேயும் நுழையும் கொலையாளிகள், விஜியைக் கொலை செய்துவிட்டு ரத்தம் படிந்த கத்தியுடன் வெளியே வந்து பதற்றமில்லாமல் சாலையில் செல்கின்றனர். கடைசியாக வரும் ஒருவர் ஹெல்மேட் அணிந்துள்ளார். விஜியைக் கொலை செய்த கும்பலைத் தனிப்படை அமைத்து தேடிவருகிறோம். கொலையாளிகள் சிக்கியப் பிறகே விஜி கொலைக்கான காரணம் தெரியவரும்" என்றனர்

 பிரபல ரவுடியிடம் ஆரம்பத்தில் ஒன்றாக தொழிலைக் கற்ற விஜிக்கும், இன்னொருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விஜி தரப்பு அந்த நபரை கொலை செய்ய முயன்றுள்ளது. ஆனால், அது தோல்வியடைந்துள்ளது. அதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. அந்த நபரும் விஜியைக் கொலை செய்ய வந்துள்ளார். அந்த முன்விரோதத்தில் விஜி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர். தற்போது, விஜியின் எதிரிகள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். இதுதான் கொலைக்கான காரணத்தை கண்டறிவதில் சிக்கல் எழுந்துள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "சினிமாவில் வருவதைப் போல இளைஞர்கள் கத்தி, அரிவாளுடன் ஒருவரை விரட்டிச் சென்றனர். அவரும், அங்கே நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு நடுவில் தப்பிச் சென்றார். அதைப்பார்த்த நாங்கள் சினிமா படக்காட்சி என்றே முதலில் கருதினோம். இதனால் அதை சிலர் வேடிக்கையும் பார்த்தனர். காரின் நடுவில் சிக்கிய அந்த நபரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். அடுத்து, வீட்டுக்குள் புகுந்த அவரையும் விடாமல் துரத்தி வெட்டினர். அவரது அலறல் சத்தத்துக்குப்பிறகுதான் அது நிஜம் என்று தெரிந்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். பிறகு போலீஸ் வந்து விசாரித்தனர். கொலை செய்தவர்கள் சர்வசாதாரணமாக சாலையில் கத்தியுடன் சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தச்சம்பவம் எங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டு. எனவே, போலீஸார் இனிமேலாவது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். 

88 மாணவிகளின் ஆடைகளை களைந்து தண்டனை வழங்கிய ஆசிரியைகள்

  

அருணாசல பிரதேசத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் 88 மாணவிகளின் ஆடைகளை களைந்து ஆசிரியைகள் தண்டனை வழங்கி உள்ளனர்.

நவம்பர் 30, 12:51 PM

இட்டாநகர்

அருணாசலபிரதேசம் பபும் பேரே மாவட்டம் தனிகப்பாவில் உள்ளது கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிக்கூடம். இந்த பள்ளிக்கூடத்தில்  கடந்த 23 ந்தேதி  பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவி இருவரை தொடர்பு படுத்தி  ஆபாச கடிதம் எழுதியதாக புகார் எழுந்தது. பள்ளிக்கூடத்தை சேர்ந்த 6- மற்றும் 7ம் வகுப்பு மாணவவிகள் தான் இந்த மோசமான கடிதத்தை  எழுதியதாக புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து 3 ஆசிரியர்கள்   6 மற்றும் 7ம் வகுப்பை சேர்ந்த 88 மாணவிகளின்  ஆடைகளை அகற்றி தண்டனை வழங்கி உள்ளனர்.

2 உதவி ஆசிரியர்கள்  மற்றும் ஒரு இளைய ஆசிரியர் சேர்ந்து 88 மாணவிகளின் ஆடைகளை அகற்றி சோதனை நடத்தி உள்ளனர். இதில் ஒரு மாணவியிடம்  இருந்து அந்த ஆபாச கடிதத்தை  கைப்பற்றி உள்ளனர். 

இந்த விவகாரம் கடந்த 27 ந்தேதி  வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைத்து சாகேலி மாணவர் ஒன்றியத்தில் புகார் அளித்து உள்ளனர். இதை தொடர்ந்து உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு உத்தரவின் பேரில் இது குறித்து உள்ளூர்  மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்

ஒரு ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவு    


  

ஒரு ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்தது.

ஒரு ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1917-ம் ஆண்டு நவம்பர் 30-ந் தேதி, ஒரு ரூபாய் நோட்டு அறிமுகம் ஆனது. அதற்கு முன்பு ஒரு ரூபாய் வெள்ளி நாணயமே புழக்கத்தில் இருந்தது. முதலாவது உலகப்போரின்போது, வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், நாணயத்தை அச்சிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதனால், அப்போதைய வெள்ளி நாணய படத்தையும், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் புகைப்படத்தையும் தாங்கி ஒரு ரூபாய் நோட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. அதன்பிறகு, அவ்வப்போது அச்சிடும் பணி நிறுத்தப்படுவதும், வடிவமைப்பு மாற்றப்படுவதுமாக ஒரு ரூபாய் நோட்டு நூற்றாண்டு கண்டுள்ளது.

மற்ற நோட்டுகளை போல இதை ரிசர்வ் வங்கி வெளியிடுவது இல்லை. மத்திய அரசே வெளியிடுகிறது. அதனால்தான், இந்த நோட்டில், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்துக்கு பதிலாக, மத்திய நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இடம்பெற்று இருக்கும்

Wednesday 29 November 2017

மக்களே உஷார்! கொலை, கொள்ளைக்கான புதுப்புது உத்திகளுடன் நடு நிசியில் காத்திருக்கும் திருடர்கள்!

 

நடு நிசியில் நீங்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கையில், திடீரென உங்கள் வீட்டு வாட்டர் டேன்க் நிரம்பி தண்ணீர் லீக் ஆகிக் கொண்டிருப்பது போல் ஒரு சத்தம் மெலிதாகக் கேட்கத் தொடங்கினால் நீங்கள் என்ன செய்வீர்கள். முதலில் மின் மோட்டாரின் ஸ்விட்ச் வீட்டினுள்ளே இருந்தால், அது ஆஃப் செய்யப்பட்டுள்ளதா? என்று சோதிப்பீர்கள். அது ஆஃப் செய்யப்பட்டிருந்த போதும் மீண்டும் தொடர்ந்து தண்ணீர் லீக் ஆகும் சத்தம் வந்து கொண்டே இருந்தால் அது என்னவென்று தெரிந்து கொள்ளும் எண்ணம் நம் தூக்கத்தை நிச்சயம் கெடுக்கும். துணிச்சலானவர்கள் எனில் உடனே கதவையோ, ஜன்னலையோ திறந்து வெளியில் எட்டிப் பார்த்து உறுதி செய்து கொள்ளவும் தயங்க மாட்டோம். தண்ணீர் லீக் ஆவதற்கே மக்களின் ரியாக்‌ஷன் இதுவென்றால் ஒரு வேளை நடு நிசியில் வீட்டுக்கு வெளியே குழந்தை அழும் சத்தம் கேட்டால் நாம் என்ன செய்வோம். மனிதாபிமானிகள் எனில் அதிலும் கிராமத்திலிருந்து சமீபத்தில் தான் சென்னை வாழ்க்கைக்கு சிஃப்ட் ஆனவர்கள் எனில் உடனே உதவும் மூடுக்கு வந்து வெளியில் எட்டிப் பார்க்கத்தான் செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் இவர்களது டார்கெட்டாம். அப்படி வெளியில் வருபவர்களை மனிதத் தன்மையே இன்றி தாக்கி வீட்டுக்குள் நுழைந்து கொலை, கொள்ளை முதல் சகலவிதமான அராஜகங்களிலும் ஈடுபட சில திருட்டுக் கும்பல்கள் கிளம்பியுள்ளனவாம். அதற்கான ஆதாரங்கள் தான் இந்தப் புகைப்படங்கள். திருட்டுக் கும்பல்கள், திருடுவதற்காகத் தேர்ந்தெடுத்த வீடுகளின் முன்னால் காத்திருக்கும் காட்சி தான் இது. முகநூலில் நண்பர் ஒருவர் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். இப்படியும் திருடர்கள் கிரியேட்டிவ்வாகச் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஆதலால் பொது மக்கள் உஷாராக இருந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அதற்காக இரவில் தண்ணீர் டேங்க் ஓவர் ஃப்ளோ ஆகி தண்ணீர் வீணடிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்றோ, அல்லது நடு இரவில் தெருவில் குழந்தை அழும் சத்தம் கேட்டால் அதை அலட்சியப்படுத்த வேண்டும் என்றோ அர்த்தமில்லை. சமூகப் பொறுப்புணர்வுடனும், மனிதாபிமானத்தன்மையுடனும் இருப்பது முக்கியம் தான் ஆனால் அதே அளவுக்கு ஏமாளிகளாக ஆகி விடக் கூடாது, வினையை விலை கொடுத்து வாங்கியவர்களாக ஆகி விடக் கூடாது என்பதும் மிக முக்கியமானதே! ஆதலால் சக உயிர்களுக்கு உதவியே செய்வதாக இருந்தாலும் யோசித்து நிதானமாக பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு உதவிக் கரம் நீட்ட வேண்டியது அவசியமாகிறது

ஜெ.வுக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தை நடிகர் சோபன்பாபு.. உறவினர் லலிதா 'பகீர்’ தகவல்

பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தை நடிகர் சோபன்பாபு என அவரது உறவினர் லலிதா மீண்டும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா சன் நியூஸ் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

1980-ல் சென்னை மயிலாப்பூரில் ஜெயலலிதா வசித்த போது அவரது வீட்டில் பிரசவம் பார்த்தோம். என்னுடைய உறவினர் ரஞ்சனி ரவீந்தரநாத்தும் நானும் உடன் இருந்தோம்.

சோபன் பாபுதான் தந்தை

ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு தந்தை நடிகர் சோபன் பாபு என்பதாக அனைவரும் கூறினார்கள். சோபன்பாவும் ஜெயலலிதாவும் ஒரே வீட்டில் குடித்தனமும் இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

   

ஜெ.வுடன் தொடர்பு இல்லை

தனக்கு பெண் குழந்தை பிறந்த விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என ஜெயலலிதா சத்தியம் வாங்கிக் கொண்டார். அதன் பிறகு எங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

   

வக்காலத்து கையெழுத்து

பெங்களூரு அம்ருதா, ரஞ்சனி ரவீந்தரநாத் குடும்பம் மூலமாகத்தான் என்னிடம் வந்து பேசினார். அவர் தாம் டி.என்.ஏ.சோதனை செய்யப் போவதாகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப் போவதாகவும் கூறினார். அதற்காகத்தான் வக்காலத்தில் கையெழுத்து போட்டோம்.

   

அம்ருதா யார்?

அம்ருதாவைப் பொறுத்தவரையில் சொத்துக்காக பேசுகிறாரா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. ரஞ்சனி ரவீந்தரநாத் குடும்பத்தினருடன்தான் அம்ருதாவுக்கு நல்ல பழக்கம் இருந்தது. எனக்கு அதிகமாக தெரியாது. இவ்வாறு லலிதா கூறினார்

Tuesday 28 November 2017

தீயோர்க்கு அஞ்சேல்

#தீயோர்க்கு_அஞ்சேல்

எனதருமை அண்ணன்
திரு நவீன்  அவர்களின் இயக்கத்தில்,

#வெயில் பட நாயகி பிரியங்கா நாயகியாக நடிக்கவிருக்கும் சமூக அவலங்களை சாடும் படம்.

#சினிமாவில் இயக்குநராக ஆவதற்கு ஒரு வரம் வேண்டும்.  அது எளிதில் எல்லோருக்கும் எட்டிவிடுவதில்லை.
தங்களின் சமுதாயம் சார்ந்த பார்வை, தன்னம்பிக்கை, தன்னடக்கம், பொருமை, ஆனால் அதே சமயம் கடின உழைப்பு.
இவைகளுக்கு கிடைத்த முதல் வெற்றி.

இதனை சீறிய முறையில் அறுவடை செய்யுங்கள். அது மட்டுமே உங்கள் எண்ணமாகக்கொண்டு, ஒரு வித்தியாசமான சிறந்த பாடத்தை மக்களுக்கு கொடுங்கள்.

தங்களின் உழைப்பை இந்த தலைப்பே சொல்லும்.
#தீயோர்க்குஅஞ்சேல்.

பெருமை அண்ணா.
#ராசாதுரியன்

தீயோர்க்கு அஞ்சாத… வெயில் பிரியங்கா

வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா. அதில் பசுபதி ஜோடியாக நடித்தார். அதன் பிறகு தொலைபேசி, திருத்தம், செங்காத்து பூமியிலே, வானம் பார்த்த பூமியிலே படங்களில் நடித்தார். அதன் பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

இப்போது 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார். கின்னஸ் புரொடக்ஷன் தயாரிப்பில், நவீன் கணேஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தீயோருக்கு அஞ்சேல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுகுறித்து வெயில் பிரியங்கா கூறியதாவது:

நான் கேரளாவில் பிறந்தாலும் என்னை நடிகையாக்கியது தமிழ் சினிமாதான். வெயில் படத்திற்கு கிடைத்த வரவேற்பில்தான் இன்று நான் நடிகையாக இருக்கிறேன். இடையில் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. காரணம் நல்ல கதைகள் அமையவில்லை. நடிக்க வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு படத்தில் நடிக்க விருப்பம் இல்லை. அதோடு மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் அமைந்ததால் அங்கேயே தொடர்ந்து நடித்து வந்தேன். 

இப்போது இரண்டு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். அதில் ஒரு படம்தான் தீயோர்க்கு அஞ்சேல். இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். துணிச்சலாக இருக்க வேண்டும் என்பதை சொல்கிற படம். ஹீரோயின் சப்ஜெக்ட் படம். 

தமிழ் சினிமா இப்போது நிறைய மாறி இருக்கிறது. இளைஞர்கள் புதிய சிந்தனையோடு படம் எடுக்க வருகிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கூட இளைஞர்கள் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். மற்ற மாநில சினிமாக்களுக்கு உதாரணமாக தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறது. தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பேன் என்கிறார் பிரியங்கா

Monday 27 November 2017

ஹே ராம் HEY RAM 2

ஹேராம்-[Hey Ram-2000=001]இன்னும் பத்தாண்டுகள் கழித்து வர வேண்டிய படம்.


ஹேராம் வெளியான போது நான் வெறும் கமல் ரசிகன்.
சகலகலாவல்லவனை ரசித்து கிடந்தவன்....
பெர்க்மன் படம் காணக்கிடைக்கும் போது...
 எத்தகைய திகைப்பு...அச்சம்... ஆச்சரியம் ஏற்ப்படுமோ,
அதைத்தான் ஹேராம் எனக்கு ஏற்ப்படுத்தியது.

பட வெளியீட்டு விழா தண்ணீர் பார்ட்டியில் நடிகை ராதிகா அடித்த கமெண்ட் இது...
 “ டப்பிங் ரைட்ஸ் வாங்கி... தமிழ்ல டப் பண்ணி ரீலிஸ் பண்ணப்போறேன்”.

படம் புரியாத காரணத்தால் தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான ரசிகர்களுக்கும் என் அனுபவம்தான் ஏற்ப்பட்டிருக்க வேண்டும்.
அதனால்தான் இப்படம் பெற வேண்டிய நியாயமான வெற்றியை பெற முடியாமல் போனது.

ஆனால் என் நண்பர் ஒருவர் இப்படத்தை எப்போதும் சிலாகித்துப்பேசுவார்.
“தமிழில் வந்த போஸ்ட் மாடர்ன் பொயட்டிக் ஹேராம்...
இந்திய சுதந்திர சரித்திரத்தை.... கேப்ஸ்யூலாக்கி கமல் தந்திருக்கிறார்.
ஒரு நாய்க்கும்... படம் விளங்காது.
ரிச்சர்டு அட்டன்பரோவின் காந்தியை விட... இப்படத்தின் உயரம் பல மடங்கு அதிகம்.
காந்தி படம்... வன்முறையை செலபரேட் செய்தது...
அதனால் அது பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.
ஹேராம்... வன்முறையை கண்டஸ்ட் செய்தது...
அதற்க்கு பாக்ஸ் ஆபிஸ் கிடைக்காது.
நிஜ காந்தி சரித்திரத்தில்... சாகேத்ராம் என்ற கற்பனை கதாபாத்திரத்தை ப்யூஷன் செய்து கலப்பது எல்லோருக்கும் சாத்தியப்படாது.
தமிழில் கமல் ஒருவர் மட்டுமே... சாத்தியப்படுத்தி சாதித்திருக்கிறார்.”

நண்பரது விமர்சனத்தால் உந்தப்பட்டு... ஹேராம் படத்தை இன்று பார்த்தேன்.
இந்த பத்தாண்டுகளில்....
 குரோசுவா,பெர்க்மன் ,அண்டோனியோனி,கோடார்டு,டிசிகா போன்ற உலகசினிமா பிரம்மாககளிடம் பெற்ற பட்டறிவு மூலம் நான் ஒரே ஒரு மில்லி மீட்டர்தான் வளர்ந்திருக்கிறேன்.
நான் இன்னும் வளர வேண்டிய உயரத்தை.... ஹேராம் எனக்கு சுட்டிக்காட்டியது.
இந்தப்படத்தை முழுதாக உள் வாங்க...
இன்னும் பத்தாண்டுகள் எனக்கு தேவைப்படுகிறது.
வருடத்திற்க்கு நூறு உலகசினிமா வீதம்...
 இன்னும் 1000 படம் பார்க்க வேண்டும்.

படம் என்னுள் வெடித்த அனுபவம் ...அடுத்த பதிவில்....

டிஸ்கி:ஆளவந்தான் படத்தில்...
நந்து காரெக்டர்.... காப்பகத்திலிருந்து தப்பித்து போய் போதை மருந்து எடுத்துக்கொண்டு பேசும் போது...
எதிரில் உள்ள காரெக்டர்... “புரியலயே...” எனச்சொல்லும்.
கமல்... “புரியலயா...சப் டைட்டில் போடுறேன்.பாரு...புரியும்.” என்பார்.

ராதிகா நக்கலுக்கு...ஒரு படைப்பாளியின் பதிலடி