பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தை நடிகர் சோபன்பாபு என அவரது உறவினர் லலிதா மீண்டும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா சன் நியூஸ் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
1980-ல் சென்னை மயிலாப்பூரில் ஜெயலலிதா வசித்த போது அவரது வீட்டில் பிரசவம் பார்த்தோம். என்னுடைய உறவினர் ரஞ்சனி ரவீந்தரநாத்தும் நானும் உடன் இருந்தோம்.
சோபன் பாபுதான் தந்தை
ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு தந்தை நடிகர் சோபன் பாபு என்பதாக அனைவரும் கூறினார்கள். சோபன்பாவும் ஜெயலலிதாவும் ஒரே வீட்டில் குடித்தனமும் இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஜெ.வுடன் தொடர்பு இல்லை
தனக்கு பெண் குழந்தை பிறந்த விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என ஜெயலலிதா சத்தியம் வாங்கிக் கொண்டார். அதன் பிறகு எங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
வக்காலத்து கையெழுத்து
பெங்களூரு அம்ருதா, ரஞ்சனி ரவீந்தரநாத் குடும்பம் மூலமாகத்தான் என்னிடம் வந்து பேசினார். அவர் தாம் டி.என்.ஏ.சோதனை செய்யப் போவதாகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப் போவதாகவும் கூறினார். அதற்காகத்தான் வக்காலத்தில் கையெழுத்து போட்டோம்.
அம்ருதா யார்?
அம்ருதாவைப் பொறுத்தவரையில் சொத்துக்காக பேசுகிறாரா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. ரஞ்சனி ரவீந்தரநாத் குடும்பத்தினருடன்தான் அம்ருதாவுக்கு நல்ல பழக்கம் இருந்தது. எனக்கு அதிகமாக தெரியாது. இவ்வாறு லலிதா கூறினார்
No comments:
Post a Comment