Monday, 20 November 2017

செல்போன் பறித்து தப்ப முயன்ற திருடர்களை நைய புடைத்த தைரிய பெண்கள்: திருவொற்றியூரில் அரங்கேறிய பரபரப்பு

திருவொற்றியூர்: தங்களிடம் செல்போன் பறித்து தப்பியோட முயன்ற திருடர்களை பிடித்து நையபுடைத்த தைரிய பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய விவரம் வருமாறு: சென்னை திருவொற்றியூர், ஈசானிய மூர்த்தி கோயில் தெருவை சேர்ந்தவர் பழனி. இவர், அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் மீனா (20). திருவொற்றியூர், பெரியார் நகரில் நடைபெற்ற ஒரு பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள நேற்றிரவு மீனா சென்றார். சீனிவாச பெருமாள் கோயில் தெரு வழியே செல்போனில் ேபசிக்கொண்டே வீட்டுக்குத் திரும்பினார். அப்போது பைக்கில் வந்த ஒரு வாலிபர் மீனாவை மறித்து அவரது செல்போனை பறிக்க முயன்றார். 

சுதாரித்துக்கொண்ட மீனா, வாலிபரின் கையைப் பிடித்து கடித்ததுடன் காலால் எட்டி உதைத்தப்படி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். பின்னர் மீனாவின் பிடியில் இருந்த அந்த நபரை மீட்டு, திருவொற்றியூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், திருவொற்றியூர் ராஜாஜி நகரை சேர்ந்த பாபு (20) என்பதும், அவர்மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். மற்றொரு சம்பவம்: திருவொற்றியூர், ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் விமலா (25). இவர் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு இரவில் செல்போனில் பேசியபடி வீட்டுக்கு நடந்து வந்தார். 

அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த ஒரு வாலிபர், விமலாவின் கையைத் தட்டிவிட்டு செல்போனை பறிக்க முயன்றார். ஆனால் விமலா, அந்த வாலிபரின் கையை பிடித்துவைத்துக்கொண்டு சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் வந்து வாலிபரை மீட்டு விசாரித்தனர். அவர் அதே பகுதியில் உள்ள ஏகவல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (26) என்பதும் அவர்மீது பல்வேறு வழிப்பறி, பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது

No comments:

Post a Comment