Friday, 24 November 2017

பத்மாவதி சர்ச்சை: ஜெய்ப்பூர் கோட்டை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் உடல் கண்டெடுப்பு

ஜெய்ப்பூர் நகர்ஹர் கோட்டையில் தூக்கில் தொடங்கிய நிலையில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதன் அருகே பாறையில் பத்மாவதி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் வரலாறு திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

டெல்லி உட்பட பல இடங்களில் இன்றும் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகே உள்ள நகர்ஹர் கோட்டையில் தூக்கிட்ட நிலையில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தின் அருகே உள்ள பாறையில் பத்மாவதி படத்திற்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

 

 

அதில் ‘‘பத்மாவதி படத்தை எதிர்க்கிறோம், நாங்கள் உருவ பொம்மை எரிக்க மாட்டோம், அவர்களை தூக்கில் தொங்க விடுவோம்’’ என்று கூறப்பட்டுள்ளது. இறந்தவரின் சட்டை பையில் ஆதார் அட்டை இருந்தது. அதன் மூலம் அவரது பெயர் சேத்தன் (வயது 22) என தெரிய வந்துள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற விவரம் தெரிய வில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment