பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பி.எம்.டபுள்யூ. மோட்டராட் நிறுவனம் R நைன் T ரேசர் மற்றும் K 1600 B என இரண்டு மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பி.எம்.டபுள்யூ. K 1600 B பேகர் இந்தியாவில் ரூ.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டிலேயே பி.எம்.டபுள்யூ. K 1600 B மாடல் பல்வேறு உலக நாடுகளில் வெளியிடப்பட்டது. புதிய பேகர் மாடல் கான்செப்ட் 101 பேகர் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தையில் கிடைக்கும் முழுமையான டூரிங் மோட்டார்சைக்கிளாகவும் இது இருக்கிறது.
புதிய K 1600 B மாடலில் புதிய டெயில் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இருக்கைகளின் உயரம் குறைக்கப்பட்டுள்ளதால், உயரம் குறைவானவர்களும் சிரமம் இன்றி இயக்க இந்த மோட்டார்சைக்கிள் வசதியானதாக இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு ரிலாக்ஸ் செய்யப்பட்டு விண்ட்ஸ்கிரீன் குறைவாகவும் எலெக்டிர்கலாக மாற்றியமைக்கக்கூடியதாக இருக்கிறது.
K 1600 GT மாடலுடன் ஒப்பி்டும் போது K 1600 B மாடலில் மாற்றியமைக்கப்பட்ட ஃபேரிங் சூட், டூரிங் மாடல்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய பக்கவாட்டுகளில் இருந்த டிஃப்ளெக்டர்கள் தற்சமயம் பின்புறம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பேனியர் கொள்ளளவு 37 லிட்டர் ஆகும்.
புதிய K 1600 B மாடலில் 1649 சிசி இன்லைன் 6-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 160 பி.எச்.பி. பவர் மற்றும் 175 என்.எம். டார்கியூ திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. க்ரூஸ் மற்றும் ரோட் என இரண்டு ரைடிங் மோட்களை கொண்டுள்ள புதிய டூரிங் மோட்டார்சைக்கிளில் முற்றிலும் எலெக்ட்ரிக் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய டைனமிக் ESA சேசிஸ் கொண்டுள்ளது.
இத்துடன் K 1600 B மாடலில் 5.7 இன்ச் ஃபுல்-கலர் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சாட்டிலைட் ரேடியோ மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ABS ப்ரோ, டைனமிக் பிரேக் லைட், டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல், ரைடிங் மோட் , க்ரூஸ் கண்ட்ரோல், செனான் ஹெட்லேம்ப், ஹீட்டெட் கிரிப், சீட் ஹீட்டிங் மற்றும் மல்டி-கண்ட்ரோலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
டியோலீவர் மற்றும் பேராலீவர் சஸ்பென்ஷன் யுனிட்களை பி.எம்.டபுள்யூ. K 1600 B கொண்டுள்ளது. இதன் பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 320 மில்லிமீட்டர் டூயல்-ஃபுளோட்டிங் டிஸ்க் மற்றும் நான்கு-பிஸ்டன் கேலிப்பர்களும், பின்புறம் 320 மில்லிமீட்டர் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மாடல் வரும் வாரங்களில் விநியோகம் செய்யப்படுகிறது
No comments:
Post a Comment