Friday, 1 December 2017

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளையடிப்பு, மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

  

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.23 லட்சத்து 12 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

டிசம்பர் 01, 07:36 PM

நாசிக், 

மராட்டிய மாநிலம் நாசிக், சாதனா டவுன் பஜாரில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். எந்திரம் செயல்படவில்லை என்று இதனை நிர்வகித்து வரும் நிறுவனத்துக்கு  குறுந்தகவல் வந்தது. உடனடியாக அந்நிறுவன ஊழியர்கள், ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பணமும் கொள்ளை போய் இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. 

விசாரணையில், மர்ம ஆசாமிகள் கியாஸ் கட்டரை பயன்படுத்தி, ஏ.டி.எம். எந்திரத்தில் துளைப்போட்டு அதில் இருந்த ரூ.23 லட்சத்து 12 ஆயிரத்தை அள்ளிச்சென்றது தெரியவந்தது. இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடித்த கையோடு, அருகில் உள்ள மற்றொரு ஏ.டி.எம். எந்திரத்திலும் அவர்கள் கைவரிசை காட்ட முயன்றிருக்கின்றனர். எனினும், அவர்களது முயற்சி பலன் அளிக்காததால், அங்கிருந்து தப்பியோடிவிட்டனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் தொடர்ச்சியாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது

No comments:

Post a Comment