Friday, 30 November 2018

மீண்டும் திரும்பி வந்த பொன் மாணிக்கவேல்'...சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

'மீண்டும் திரும்பி வந்த பொன் மாணிக்கவேல்'...சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Home > தமிழ் news

By Jeno | Nov 30, 2018 03:15 PM 

ஒரு வருடத்துக்கு சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

 

இன்றுடன் ஓய்வு பெற இருந்த பொன்.மாணிக்கவேலிற்கு நேற்று ரயில்வே காவல்துறையின் சார்பில் பிரிவு உபசாரவிழா நடைபெற்றது. சிலைக்கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக அடுத்த ஒரு வருடத்துக்குத் தொடரும் என்றும் உத்தரவிட்டது.

 

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி, தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து, டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இன்றுடன் பதவி ஓய்வு பெற இருந்த ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிலைக்கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக அடுத்த ஒரு வருடத்துக்குத் தொடரும் என்றும் உத்தரவிட்டது.

 

மேலும் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் பிரிவு பொன்.மாணிக்கவேல் தலைமையில் இயங்கும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தெரிவித்தார்.


Beyinwoode

Friday, 23 November 2018

கண்ணீர் விட்டு கதறி அழுத கவிஞா் சினேகன்

கஜா புயலின் பேரழிவுகள் காரணமாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் தலைமையில் டெல்டா மாவட்டங்களில் அனைத்திலும் பல்வேறு கட்ட நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன, அந்த வகையில் நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகள்  வழங்கிய கவிஞா் சினேகன் உணவு வழங்கும்போது கண்ணீர்விட்டு கதறி அழுதார்கள், அதைப்பார்த்த மக்களும் அழுது அவருக்கு ஆறுதல் கூறியது வியத்தகு விஷயமாகும்.

Thursday, 22 November 2018

நிவாரணப் பணியில் மக்கள் நீதி மய்யம் கவிஞா் சினேகன்

மக்கள் நீதி மய்யம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கவிஞா் சினேகன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கட்சியின் நிர்வாகிகள் மிகத்தீவிரமாக மக்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்...  இதுவரை 1000 நபர்களுக்கு உணவு, குடிநீர், பிஸ்கட், குடங்கள், கொசுவத்தி, மருந்து மாத்திரைகள், அரிசி மூட்டைகள், போர்வைகள், துண்டுகள், உடை, நாப்கின்கள், உட்பட இன்னும் பல அத்தியாவசிய பொருட்கள் 10 tata ace வாகனத்தில் மக்களுக்கு அளிக்க கொண்டு செல்லப்படுகிறது...

Saturday, 3 November 2018

அடடே ... சினமா துளிகள்...

கேப்டன் பிரபாகரன், 100வது படம். ஆனா, படம் ஆரம்பிச்சு 35 நிமிசம் கழிச்சுதான் கேப்டன் இண்ட்ரோ.

தில்லு முல்லு படத்துல பரபரப்பான ஒரு காட்சியில அவரையே அறியாம பாலசந்தர் ஒரு ஷாட்ல வருவாரு. ஒக்காந்து டைரக்ட் பண்ணிட்டு இருக்கும்போது கேமராவுல அவர் விழுந்துடுவாரு. கடைசியில 20 ஆண்டுகள் கழித்து ஒருத்தர் சொல்லும்போது தான் அவரே அத நோட் பண்ணாராம்.
இதுல 9:08 நொடிகள்ல பாருங்க. பாலசந்தர் இருப்பாரு
https://t.co/AizrFPd8HF

தம்பி படத்துல ஃப்ளாஷ்பேக் சீன்களை தவிர்த்து, மாதவன் கண் இமைக்காமல் நடிச்சிருப்பாப்ல.

பாட்ஷால இன்டர்வலுக்கு அப்புறம் தான் ரகுவரன காட்டுவாங்க..

ராட்சசன் படத்தில வில்லனா நடிச்சது யாருன்னு 25வது நாள் தான் சொன்னாங்க...

ஊமைவிழிகள் படத்துல முக்கால்வாசி படத்துக்கு அப்புறம் தான் விஜயகாந்த் வருவார். 

காசி படத்தில் கண் தெரியாமல் விக்ரம் நடித்திருப்பார் அது மலையாள ரீமேக் படம் மலையாளத்தில் நடித்தது ஜெமினி படத்தில் வில்லனாக நடித்த கலாபவன் மணி தான்

ஓரே படத்தில்

மெய்ன் வில்லன்
மெய்ன் காமெடி
மெய்ன் ஹீரோ 3ம் பண்ணது கம‌ல் சார்  தசவதாரம்

சதி லீலாவதி படத்துலயும், கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழிச்சுதான் உலக நாயகன் வருவாப்ல!?.. 😉

பாட்ஷா படத்துல ஃபிளாஷ் பேக்குல ஒரு ஃபிளாஷ் பேக் வரும்..

அஞ்சாதே படத்துல அந்த மொட்டை வில்லன் முகத்தை கடைசி வரை காட்டமாட்டாரு மிஷ்கின்.....

எஸ்.ஜெ.சூர்யா இயக்கத்தில் நடிச்ச அஜித் வாலிலயும், விஜய் குஷிலையும் அவங்க ரெண்டு பேரோட கேரக்டர்
பேரு "ஷிவா" தான்..

அந்த ரெண்டு படமும் அவங்க Career ல பெரிய turning point  தான்

தமிழ்ல @iam_SJSuryah இயக்குன எல்லா படத்துலையும் ஹீரோ பெயரு சிவா தான், நியூவ தவிர.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜயின் அம்மாவை காட்டமாட்டங்க

10 எண்றதுக்குள்ள படத்துல
விக்ரமுக்கு பெயர் சொல்லமாட்டாங்க

T.R'ன் படங்கள் பெரும்பாலும் 9 எழுத்துக்களில்தான் அமைந்திருக்கும்.

ரஹ்மானின் பாடல்களில் பெரும்பாலும் இரட்டைக் கிளவி வடிவம் வரும்.

மன்னன் படத்தில் ரஜினி பாடிருப்பாரு... அடிக்குது குளிரு

சதிலீலாவதி படத்துல கமலுக்கு கோவை சரளா ஹீரோயின்

முதன் முதலில் ஒரு கோடியில் தயாரான பிரமாண்டமான படம் விக்ரம்

ஹரியோட பெரும்பாலான படத்தில ஹீரோவ, ஹீரோயின் முதல்ல தப்பா நெனச்சு அப்றம் உண்மை தெரிஞ்சு லவ் பண்றா மாதிரி தான் வரும். 100% #Verified

விஜய் ஆண்டனி இதுவரை ஹீரோவா நடிச்ச எல்லா படத்துக்கும் அவர்தான் இசை, இந்தியா-பாகிஸ்தான் படம் தவிற.

நினைத்தேன் வந்தாய்-என்னவளே!என்னவளே! பாடல் முழுக்க விஜயின் cooling glass  ல் காமிரா தெரியும்.

பார்த்தேன் ரசித்தேன் படத்துல வர "எனக்கென ஏற்கனவே பிறந்தவள்" பாட்டுல முழு கதையும் சிம்பாலிக்கா சொல்லியிருப்பாங்க. "முதல்ல hero & heroine சந்திப்பு, வில்லனால குழப்பம், பிரிவு, கடைசியில பேசி புரிஞ்சு ஒன்னா சேருறது" னு கவிதையா இருக்கும். 😍😎

உள்ளத்தை அள்ளித் தா
இதுல ஒரு டைனிங்டேபிள்
ஆள்மாறாட்ட சீன்ல
கவுண்டமணி
அழுது அதகளம் பண்ணுவார்.
கூட நடிக்குர கார்த்திக்
அதே ரியாக்சன் தான் தரணும்,
ஆனா சிரிப்ப அடக்க முடியாம
துண்டை வைச்சு வாய மூடி நடிச்சுருப்பார்.
இப்ப பார்த்தாலும்
குபீர் சீன்தான்.

இருவர் படத்துல இரண்டு பேர் மட்டும் தான் நடிச்சு இருப்பாங்க

In Last 20 years fight scenes இல்லாம விஜய் நடிச்ச ஒரே படம் நண்பன்

கருத்தம்மா ல பாரதிராஜா பாடிருப்பாரு ...காடு பொட்டகாடு அந்த song

அமராவதி படம் அஜித் க்கு குரல் கொடுத்தது சீயான் விக்ரம் அவர்கள்....மற்றும் காதலன் பிரபு தேவா க்கும் சீயான் விக்ரம் தா டப்பிங்.......இன்னும் இதல விக்ரம் கொடுத்த வாய்சா னு நரைய படங்கள் இருக்கு....

தொட்டி ஜெயா படத்துல சிம்பு படம் முழுவதும் கருப்பு சட்டைதான் போட்டு வருவாரு...

காத்து அடிக்குது காத்து அடிக்குது பாட்டுல சிரிப்பு சூறாவளி சூரி வருவாப்டி

சந்திரமுகியில் அனைத்து ஆண் character பெயர்களும் முருகனின் பெயராக இருக்கம்.