Sunday, 2 December 2018

பாடலாசிரியர் சினேகன் பிறந்த தினம் இவரை பற்றிய சில வரிகள்

சினேகன் தமிழ் பாடலாசிரியர், நடிகர், மற்றும் கவிதை எழுத்தாளர் ஆவார். சினேகன், சிவசெல்வமாக தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கரியாப்பட்டி என்ற சிறு கிராமத்தில், எட்டாவது மகனாக பிறந்து வளர்ந்தவர். இவரது குடும்பம் விவசாய குடும்பமாகும்.

இவர் சென்னைக்கு வந்ததும், கவிஞர் வைரமுத்துவிடம் ஐந்து வருடம் பணியாற்றியுயுள்ளார். பின்பு புத்தம் புது பூவே திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு பாடலாசிரியராக அறிமுகமானார். இது வரை 4000 திரைப்பட பாடல்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். 500 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.

முதன்முதலாக கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பினை பெற்று தன் திரையுலக பிரவேசத்திற்கு ஓர் தளம் அமைத்துக் கொண்டார்.

அன்று முதல் தொடர்ந்து கிட்டத்தட்ட 95வரை அதாவது 5 வருடங்கள் வைரமுத்து அவர்களின் உதவியாளராகப் பணிப்புரிந்து பின்பு, சில தனிப்பட்ட காரணங்களால் விலகி வந்தேன். கிட்டத்தட்ட சில வருட காத்திருப்புக்குப் பின் ”புத்தம் புது பூவே” என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இவர் பாடல்கள் எழுதினர். அத்தனை பாடல்களும் ஹிட். ஆனால் படம் திரைக்கு வரவில்லை. தொடர்ந்து ‘பெண்கள்” ”கண்டேன் சீதை” என்ற படத்திலும் பாடல் எழுதினார். அதற்குப் பிறகு இவர் எழுதி பல பாடல்கள் வந்தன என்றாலும் குறிப்பா ”பாண்டவர் பூமி” படத்தை சொல்ல வேண்டும். இதில் இவர் எழுதிய ”அவரவர் வாழ்க்கையில்” என்ற பாடல் தமிழகத்தில் எல்லோரையும் முணுமுணுக்க வைத்தது… மெல்ல சினேகன் என்ற இளைஞன் – கவிஞன் வெளியுலகிற்கு அடையாளப்படுத்தப்பட்டான். சமயம்கிடைக்கும் போதெல்லாம் கவிதைப் புத்தகங்களை எழுதியுள்ள சிநேகன் ‘முதல் அத்தியாயம்’ , ‘இன்னும் பெண்கள் அழகாய் இருக்கிறார்கள்’ உள்ளிட்ட தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட 200 பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ள சிநேகன் அவர்கள் பல இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். ஆனால் இதுவரை இளையராஜா, ஏ.ஆர். ரஹமான் ஆகியோரிடம் தான் பணியாற்றவில்லை. இவர் பாடல் இடம் பெற்ற திரைப்படங்கள் புத்தம் புது பூவே, பாண்டவர் பூமி, சார்லி சாப்ளின், மௌனம் பேசியதே, ஏப்ரல் மாதத்தில், பகவதி, சாமி, கோவில், துக்கோட்டையிலிருந்து சரவணன், போஸ், ஆட்டோகிராஃப், பேரழகன், மன்மதன், ராம், குண்டக்க மண்டக்க, அகரம், பருத்திவீரன், சக்கர வியூகம், ஏகன், யோகி, படிக்காதவன், முத்திரை, ஆடுகளம், பதினாறு, மாப்பிள்ளை, காதல் 2 கல்யாணம், கழுகு, சத்ரியன் >இவர் நடித்த திரைப்படங்கள்

யோகி, உயர்திரு 420, ராஜராஜ சோழனனின் போர்வாள், பூமிவீரன்

இவர் எழுதிய புத்தகங்கள்

முதல் அத்தியாயம், இன்னும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள், இப்படியும் இருக்கலாம், புத்தகம், அவரவர் வாழ்க்கையில்

இவர் நடித்த தொலைக்காட்சி தொடர்கள்

தீபங்கள், தெக்கத்தி பொண்ணு, உயிர்மெய், 

Big boss  நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளர், இரண்டாவது பரிசினை பெற்றவர்.

Saturday, 1 December 2018

காசு கொடுத்து டீ சாப்பிட்ட கமல்!

கமல்ஹாசன் சாலையோரத்தில் டீ குடித்து அரசு பேருந்தில் பயணம்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை கீழக்காடு என்ற இடத்தில் கமல்ஹாசன் சாலையோர டீக்கடையில் தனது கட்சியினருடன் டீ குடித்து அங்குள்ள மக்களிடம் பேசி புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியினரோடு புயல் பாதித்த பகுதிகளில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் குறைகளைக் கேட்டு வருகிறார். அந்த வகையில், நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் இன்று பல ஊர்களுக்கு சென்றார்.

தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட தம்பிக்கோட்டை கிழக்காடு என்ற பகுதிக்குச் சென்ற அவர் அங்குள்ள டீக்கடைக்கு தனது கட்சியினருடன் சென்று டீ குடித்தார். கமல்ஹாசனைப் பார்த்ததும் அங்குள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குடித்த அத்தனை டீக்கும் கமல்ஹாசனே காசு கொடுத்தார்.

பாட்டியின் அன்பு

டீக்கடையில் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு பாட்டி வாஞ்சையுடன் கமல்ஹாசனின் கன்னத்தைப் பிடித்து பேசினார். அவருடன் பாசமாக பேசி அவரது குறைகளைக் கேட்டார் கமல்ஹாசன்.

 

   

ஏரிப்புறக்கரை கிராமம்

இதேபோல மீனவர் கிராமமான ஏரிப்புறக்கரை கிராமத்திற்கும் கமல்ஹாசன் சென்றார். அங்கு கிராமம் முழுவதையும் அவர் சுற்றிப் பார்த்துப் பார்வையிட்டார். தங்களுக்கு இதுவரை எவ்வித நிவாரண உதவிகளும் அரசு சார்பாக வராத காரணத்தினால் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தேர்தலில் ஓட்டிற்காக மட்டும் வரும் அரசியல்வாதிகள் மத்தியில் தங்கள் குறைகளை பார்க்க நேரில் வந்திருந்த கமலிடம் தங்கள் குறைகள் அனைத்தையும் தெரிவித்தனர்.

   

இதுவரை யாரும் வரவில்லை

இங்குள்ள மக்கள் மட்டுமல்லாமல் கமல் போன இடமெல்லாம் யாரும் எங்களைப் பார்க்க வரவில்லை. அதிகாரிகளையே காணோம் என்று குமுறலை வெளியிட்டனர். இதுகுறித்து கமல் கூறுகையில், இது ஆச்சரியமாக இருக்கிறது. அமைச்சர்கள் பேச்சை நிறுத்தி விட்டு வேகமான செயல்பாடுகளில் இறங்க வேண்டும் என்றார்.

   

எல்லாம் போச்சு

ஏரிப்புறக்கரை கிராமத்தைப் பொறுத்தவரை அங்குள்ள மீனவர்கள் தங்களது படகுகள் அனைத்தையும் இழந்து விட்டனர். வீடுகள் இடிந்து விட்டன. மொத்த வாழ்வாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மீன் பிடி வலைகள் கூட மிஞ்சவில்லை. மீண்டு வர பல வருடமாகும் என்று கமல்ஹாசனிடம் அவர்கள் குமுறினர். அவர்களுக்கு கமல் ஆறுதல் தெரிவித்தார்.


Oneindiya

இளையராஜா வின் கதை

பாவலரை பிரிந்துவிட்டு எழுபதுகளின் தொடக்கத்தில் சென்னைக்கு பிழைப்பு தேடிவந்த பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் மூவரும் ‘பாவலர் பிரதர்ஸ்’ என்கிற பெயரில்தான் இயங்கிக் கொண்டிருந்தார்கள் (இவர்களை பிரிந்த பாவலர் அதன் பிறகு மிகக்குறுகிய காலமே உயிரோடு இருந்தார்).

‘அன்னக்கிளி’யில் இருந்துதான் இளையராஜா என்கிற பெயரில் செயல்படத் தொடங்கினார்கள். லண்டன் டிரினிட்டி பள்ளியில் முறையாக இசை தேர்ந்தவர் என்பதால் ராஜாவின் பெயரில் செயல்படுவதில் பாஸ்கருக்கும், கங்கை அமரனுக்கும் ஆட்சேபணை எதுவுமில்லை.

ஒவ்வொருவரும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு அவரவர் பிழைப்பை தனித்தனியாக பார்த்தாலும் மதிய உணவு மட்டும் ஒன்றாகதான் உண்பார்கள். தொண்ணூறுகளின் தொடக்கம் வரை, ராஜாவின் பிரசாத் தியேட்டர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில்தான் சகோதரர் மூவரும் மதியம் சந்திப்பார்கள். அவரவருக்கு அவரவர் வீட்டில் இருந்து சாப்பாடு வந்துவிடும்.

தனியாக இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று கங்கை அமரன் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்தாலும் அண்ணன் ராஜாவுக்கு மேனேஜராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

பாஸ்கரும், அமரனும் சுத்த அசைவம். ராஜா சைவம். எனவே கொஞ்சம் இடைவெளி விட்டு ராஜா அமைதியாக சாப்பிடுவார். அமரன், லொடலொடவென்று பேசிக்கொண்டே இருப்பார். மற்ற இருவரும் இவர் பேச்சை கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.

‘தர்மதுரை’ படத்துக்கு ராஜா இசையமைத்துக் கொண்டிருந்தார். வேறொரு வேலையில் இருந்த அமரனுக்கு போன். “டேய், ரஜினி படத்துக்கு பாட்டெழுதணும். மதியம் வர்றப்போ எழுதிக் கொடுத்துடு”

மதியம் பிரசாத்துக்கு அமரன் வந்து சேர்ந்தபோது ரெக்கார்டிங் தியேட்டர் வாசலில் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு பாஸ்கர் உட்கார்ந்திருந்தார். அவருடைய மற்றும் அமரனுடைய சாப்பாட்டு பைகள் வெளியே வைக்கப்பட்டிருந்தன.

கோபத்துடன் உள்ளே நுழைந்தார் அமரன். “டேய், ட்யூன் தெரியுமில்லே. சாப்பிட்டுட்டு உடனே பாட்டை எழுதிக் கொடுத்திடு” என்றார் ராஜா.

“அதிருக்கட்டும். எங்க சாப்பாட்டுப் பையை யாரு வெளியே வெச்சது?”

“நான்தான் வைக்க சொன்னேன். நான் சைவம். நீங்க அசைவம். செட் ஆகாது. தனியா சாப்பிடுங்கன்னு உங்க அண்ணிதான் சொல்லிச்சி”

கொதித்துப் போன அமரன் விருட்டென்று வெளியே வந்தார். மனம் நொந்துப் போயிருந்த பாஸ்கர், சாப்பிடாமலேயே கிளம்பிவிட்டார். அமரனும் பசியோடு விறுவிறுவென்று பாட்டு எழுதத் தொடங்கினார்.

பொதுவாக இளையராஜா பாடல்களுக்கு அவரே பல்லவியை எழுதி வைத்திருப்பார்.

அமரன் எழுதவேண்டிய பாடலுக்கு பல்லவி.

“ஆணென்ன பெண்ணென்ன
நீயென்ன நானென்ன
எல்லாம் ஓரினம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்”

விடுவிடுவென அமரன் பாட்டை தொடர ஆரம்பித்தார்.

“நீயும் பத்து மாசம்
நானும் பத்து மாசம்
மாறும் இந்த வேஷம்”

சரணத்தில் அண்ணனை விளாச ஆரம்பித்தார்.

“ஒண்ணுக்கொண்ணு ஆதரவு
உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ள பேதம் இல்ல
பார்ப்பதிலே ஏன் பிரிவு
பொன்னு பொருள் போகும் வரும்
அன்பு மட்டும் போவதில்லை
தேடும் பணம் ஓடிவிடும்
தெய்வம் விட்டுப் போவதில்லை
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்
இன்னும் மயக்கமா?”

பாட்டு எழுதிய பேப்பரை தூக்கி இளையராஜாவின் மேஜை மீது போட்டார்.

“இதான் பாட்டு. புடிச்சிருந்தா வெச்சிக்கோ. இல்லைன்னா தூக்கிப்போடு” என்று சொல்லிவிட்டு முகத்தைகூட ஏறெடுத்துப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தார். எப்படியும் அந்தப் பாடலை ராஜா, ரெக்கார்டு செய்யமாட்டார் என்பது அமரனின் நம்பிக்கை.

ஆனால்-

அந்த பாட்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் பதிவு செய்யப்பட்டது. படத்தின் சிச்சுவேஷனுக்கு பொருத்தமான பாட்டு என்பதால், தன்னை குறிவைத்து எழுதப்பட்ட பஞ்ச்லைன்களை அனுமதித்தார் இளையராஜா.

ராஜா மட்டும் சளைத்தவரா?

பஞ்சு அருணாச்சலம் எழுதவேண்டிய அடுத்த பாட்டுக்கு பல்லவி எழுதுகிறார்.

“அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி”

இந்த கதையெல்லாம் ரஜினிக்கு தெரியாது. ‘தர்மதுரை’ படத்தில் பாடல்கள் மிகவும் பவர்ஃபுல்லாக அமைந்ததில் அவருக்கு சந்தோஷம். ஒருமுறை கங்கை அமரனை சந்தித்தபோது, “நம்ம படத்துலே பாட்டெல்லாம் ரொம்ப பிரமாதமா அமைஞ்சுடுச்சி” என்று சொல்லியிருக்கிறார். பதிலுக்கு அமரன், இந்த வரலாற்றை எடுத்துரைக்க, தன்னுடைய படத்தில் பணியாற்றும்போது சகோதரர்களுக்குள் இப்படியொரு பிளவு ஏற்பட்டு விட்டதே என்று பெரிதும் மனம் வருந்தினாராம்.

கலைஞர்களின் கோபதாபங்கள்கூட கலையாகதான் வெளிப்படும்.

நன்றி : யுவகிருஷ்ணா
பதிவு : வைரஸ் சைமன்