கஜா புயலின் பேரழிவுகள் காரணமாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் தலைமையில் டெல்டா மாவட்டங்களில் அனைத்திலும் பல்வேறு கட்ட நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன, அந்த வகையில் நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகள் வழங்கிய கவிஞா் சினேகன் உணவு வழங்கும்போது கண்ணீர்விட்டு கதறி அழுதார்கள், அதைப்பார்த்த மக்களும் அழுது அவருக்கு ஆறுதல் கூறியது வியத்தகு விஷயமாகும்.
Friday, 23 November 2018
Thursday, 22 November 2018
நிவாரணப் பணியில் மக்கள் நீதி மய்யம் கவிஞா் சினேகன்
மக்கள் நீதி மய்யம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கவிஞா் சினேகன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கட்சியின் நிர்வாகிகள் மிகத்தீவிரமாக மக்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்... இதுவரை 1000 நபர்களுக்கு உணவு, குடிநீர், பிஸ்கட், குடங்கள், கொசுவத்தி, மருந்து மாத்திரைகள், அரிசி மூட்டைகள், போர்வைகள், துண்டுகள், உடை, நாப்கின்கள், உட்பட இன்னும் பல அத்தியாவசிய பொருட்கள் 10 tata ace வாகனத்தில் மக்களுக்கு அளிக்க கொண்டு செல்லப்படுகிறது...
Saturday, 3 November 2018
அடடே ... சினமா துளிகள்...
கேப்டன் பிரபாகரன், 100வது படம். ஆனா, படம் ஆரம்பிச்சு 35 நிமிசம் கழிச்சுதான் கேப்டன் இண்ட்ரோ.
தில்லு முல்லு படத்துல பரபரப்பான ஒரு காட்சியில அவரையே அறியாம பாலசந்தர் ஒரு ஷாட்ல வருவாரு. ஒக்காந்து டைரக்ட் பண்ணிட்டு இருக்கும்போது கேமராவுல அவர் விழுந்துடுவாரு. கடைசியில 20 ஆண்டுகள் கழித்து ஒருத்தர் சொல்லும்போது தான் அவரே அத நோட் பண்ணாராம்.
இதுல 9:08 நொடிகள்ல பாருங்க. பாலசந்தர் இருப்பாரு
https://t.co/AizrFPd8HF
தம்பி படத்துல ஃப்ளாஷ்பேக் சீன்களை தவிர்த்து, மாதவன் கண் இமைக்காமல் நடிச்சிருப்பாப்ல.
பாட்ஷால இன்டர்வலுக்கு அப்புறம் தான் ரகுவரன காட்டுவாங்க..
ராட்சசன் படத்தில வில்லனா நடிச்சது யாருன்னு 25வது நாள் தான் சொன்னாங்க...
ஊமைவிழிகள் படத்துல முக்கால்வாசி படத்துக்கு அப்புறம் தான் விஜயகாந்த் வருவார்.
காசி படத்தில் கண் தெரியாமல் விக்ரம் நடித்திருப்பார் அது மலையாள ரீமேக் படம் மலையாளத்தில் நடித்தது ஜெமினி படத்தில் வில்லனாக நடித்த கலாபவன் மணி தான்
ஓரே படத்தில்
மெய்ன் வில்லன்
மெய்ன் காமெடி
மெய்ன் ஹீரோ 3ம் பண்ணது கமல் சார் தசவதாரம்
சதி லீலாவதி படத்துலயும், கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழிச்சுதான் உலக நாயகன் வருவாப்ல!?.. 😉
பாட்ஷா படத்துல ஃபிளாஷ் பேக்குல ஒரு ஃபிளாஷ் பேக் வரும்..
அஞ்சாதே படத்துல அந்த மொட்டை வில்லன் முகத்தை கடைசி வரை காட்டமாட்டாரு மிஷ்கின்.....
எஸ்.ஜெ.சூர்யா இயக்கத்தில் நடிச்ச அஜித் வாலிலயும், விஜய் குஷிலையும் அவங்க ரெண்டு பேரோட கேரக்டர்
பேரு "ஷிவா" தான்..
அந்த ரெண்டு படமும் அவங்க Career ல பெரிய turning point தான்
தமிழ்ல @iam_SJSuryah இயக்குன எல்லா படத்துலையும் ஹீரோ பெயரு சிவா தான், நியூவ தவிர.
துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜயின் அம்மாவை காட்டமாட்டங்க
10 எண்றதுக்குள்ள படத்துல
விக்ரமுக்கு பெயர் சொல்லமாட்டாங்க
T.R'ன் படங்கள் பெரும்பாலும் 9 எழுத்துக்களில்தான் அமைந்திருக்கும்.
ரஹ்மானின் பாடல்களில் பெரும்பாலும் இரட்டைக் கிளவி வடிவம் வரும்.
மன்னன் படத்தில் ரஜினி பாடிருப்பாரு... அடிக்குது குளிரு
சதிலீலாவதி படத்துல கமலுக்கு கோவை சரளா ஹீரோயின்
முதன் முதலில் ஒரு கோடியில் தயாரான பிரமாண்டமான படம் விக்ரம்
ஹரியோட பெரும்பாலான படத்தில ஹீரோவ, ஹீரோயின் முதல்ல தப்பா நெனச்சு அப்றம் உண்மை தெரிஞ்சு லவ் பண்றா மாதிரி தான் வரும். 100% #Verified
விஜய் ஆண்டனி இதுவரை ஹீரோவா நடிச்ச எல்லா படத்துக்கும் அவர்தான் இசை, இந்தியா-பாகிஸ்தான் படம் தவிற.
நினைத்தேன் வந்தாய்-என்னவளே!என்னவளே! பாடல் முழுக்க விஜயின் cooling glass ல் காமிரா தெரியும்.
பார்த்தேன் ரசித்தேன் படத்துல வர "எனக்கென ஏற்கனவே பிறந்தவள்" பாட்டுல முழு கதையும் சிம்பாலிக்கா சொல்லியிருப்பாங்க. "முதல்ல hero & heroine சந்திப்பு, வில்லனால குழப்பம், பிரிவு, கடைசியில பேசி புரிஞ்சு ஒன்னா சேருறது" னு கவிதையா இருக்கும். 😍😎
உள்ளத்தை அள்ளித் தா
இதுல ஒரு டைனிங்டேபிள்
ஆள்மாறாட்ட சீன்ல
கவுண்டமணி
அழுது அதகளம் பண்ணுவார்.
கூட நடிக்குர கார்த்திக்
அதே ரியாக்சன் தான் தரணும்,
ஆனா சிரிப்ப அடக்க முடியாம
துண்டை வைச்சு வாய மூடி நடிச்சுருப்பார்.
இப்ப பார்த்தாலும்
குபீர் சீன்தான்.
இருவர் படத்துல இரண்டு பேர் மட்டும் தான் நடிச்சு இருப்பாங்க
In Last 20 years fight scenes இல்லாம விஜய் நடிச்ச ஒரே படம் நண்பன்
கருத்தம்மா ல பாரதிராஜா பாடிருப்பாரு ...காடு பொட்டகாடு அந்த song
அமராவதி படம் அஜித் க்கு குரல் கொடுத்தது சீயான் விக்ரம் அவர்கள்....மற்றும் காதலன் பிரபு தேவா க்கும் சீயான் விக்ரம் தா டப்பிங்.......இன்னும் இதல விக்ரம் கொடுத்த வாய்சா னு நரைய படங்கள் இருக்கு....
தொட்டி ஜெயா படத்துல சிம்பு படம் முழுவதும் கருப்பு சட்டைதான் போட்டு வருவாரு...
காத்து அடிக்குது காத்து அடிக்குது பாட்டுல சிரிப்பு சூறாவளி சூரி வருவாப்டி
சந்திரமுகியில் அனைத்து ஆண் character பெயர்களும் முருகனின் பெயராக இருக்கம்.
Thursday, 11 October 2018
வைரமுத்து மீது இப்போது புகார் ஏன்?' சின்மயி சொல்லும் காரணங்கள் #MeToo
சமீபகாலமாகப் பணியிடங்களில் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்ட பெண்கள் அந்தச் சம்பவங்களை `மி டூ’ என்கிற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தங்களை அடையாளம் காட்டியோ, காட்டாமலோ, அதேபோல காரணமான ஆண்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுட்டிக்காட்டும் இந்த `மி டூ #MeToo’ கேம்பைன் கடந்த இரு தினங்களாகத் தமிழகத்திலும் குறிப்பாக, தமிழ் சினிமாவில் பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறது. `கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்’ என, பாதிக்கப்பட்ட ஒரு பெண் அனுப்பியதாகச் சில மெசேஜ்களை சந்தியா மேனன் என்கிற பத்திரிகையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததுதான் இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளி. அந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்த பின்னணிப் பாடகி சின்மயி (வைரமுத்து பாடல்கள் எழுதிய `கன்னத்தில் முத்தமிட்டாள்' முதல் பல படங்களில் பாடியிருக்கிறார்) அதில், `அவர் பற்றி எல்லாருக்கும் தெரியும்; நிறைய பாடகிகள் இதை அறிவார்கள். அவர் இப்படித்தான்; என்கிற பொருள்பட கருத்துப் பதிவிட்டிருந்தார். (`இசையமைப்பாளர் அல்லவா பாட வாய்ப்புத் தருவார்’ என நினைக்கிறவர்களுக்கு; பிரபலமான பாடலாசிரியர்கள் பாடகிகளை சிபாரிசு செய்து கமிட் செய்வது பாலிவுட், கோலிவுட் என எல்லா இடத்திலும் இருப்பதே.)
வைரமுத்து மீது சின்மயி குற்றச்சாட்டுகளை அடுக்க இவை இரண்டு விஷயங்கள்தாம் காரணம் என முன்வைக்கிறார்.

Sponsored
2004-ல் ஸ்விட்சர்லாந்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக `வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் வெளியீட்டு விழா நடந்தது. விழா முடிந்ததும் மற்ற அனைவரையும் அனுப்பிவிட்டு, என்னையும் என் அம்மாவையும் மட்டும் இருக்கச் சொன்னார்கள், பிறகு, வைரமுத்து தங்கியிருந்த ஹோட்டலுக்கு என்னை மட்டும் அழைத்தார்கள். அழைத்தவர்களின் வார்த்தைகளே நோக்கத்தைக் காட்டியதால் நான் மறுத்துவிட்டேன். பிறகு, அதற்காக மிரட்டும் தொனியிலும் வார்த்தைகளை எதிர்கொண்டேன்.’’
Sponsored
சின்மயி அம்மாவும் இதை உறுதிப்படுத்திய நிலையில், அமைதி காத்த வைரமுத்து ட்விட்டரில் பதில் தந்தார். அதில் `அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் பொருட்படுத்துவதில்லை’ எனச் சொல்ல, அதை ரீ ட்வீட் செய்த சின்மயி, வைரமுத்துவை `பொய்யர்’ என்றார்.
இப்படிப் போய்க்கொண்டிருக்கும் விவகாரத்தில் சின்மயிக்கு ஆதரவாகவும், `வைரமுத்து வரிகளில் பாடிய போதெல்லாம் சொல்லாமல், `இப்போது சொல்வது ஏன்’ எனக் கேள்வி எழுப்பியும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்திட்டு வருகின்றனர். இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடகி சக்திஸ்ரீகோபாலன் போன்றோர் சின்மயிக்கு ஆதரவாக ட்வீட் செய்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், ஸ்விட்சர்லாந்தில் நடந்த நிகழ்ச்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை என நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சுரேஷ் என்பவர் மறுத்திருக்கிறார்.
``அந்த சுரேஷ் வைரமுத்துவுக்கு நெருக்கமான நண்பர்; வைரமுத்துவின் விருப்பத்தின் பெயரிலேயே அந்த நிகழ்ச்சிக்கு சின்மயி அழைக்கப்பட்டார்’’ எனச் சிலர் சொல்ல, சின்மயி அம்மாவோ, சுரேஷை `தங்கமான பையன்’ என ஒரு விவாத நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.
சின்மயியிடம், `எப்போதோ நடந்த சம்பவத்தை இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன என்று’ கேட்டோம்.

`மி டூ’ மூவ்மென்ட் இப்போதுதான் வந்திருக்கிறது. எனவே, பேச இது சரியான தருணமே. நிறைய பேர் இதைக் கடந்தே வந்திருப்பார்கள். பலரும் பல காரணங்களால் இதைப் பேச முடியாதவர்களாக இருக்கலாம். எனக்கு என் வீடும் கணவரும் சப்போர்ட்டாக இருக்கிறார்கள், அதனால் பேசுகிறேன்’ என்கிறார்.
இந்த விவகாரம் எப்படி நீளும் என்பது தெரியவில்லை. சட்ட ரீதியாக அணுகி தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டுமென்றால், அதற்கு, ஆதாரம் தேவை. `மீ டூ’ இயக்கத்தின் நோக்கமே தவறு செய்ய நினைக்கிற ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுப்பதே’ என்கின்றனர், பாதிக்கப்பட்டதாக வெளியில் வரும் பெண்கள்.
விகடன்
Monday, 19 March 2018
'பெண் வேடத்தில் கொள்ளையடிக்கச் சென்ற வாலிபர்கள்' - தி.நகரில் பரபரப்பு!
சென்னை பாண்டிபஜாரில், பெண்களைப்போல உடையணிந்து நூதன முறையில் கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தி.நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மருத்துவர் ராதாகிருஷ்ணன், ஜி.என்.செட்டி சாலையில் அவரது மனைவியுடன் வசித்துவருகிறார். இவர், நேற்று வீட்டில் இருக்கும்போது, இரண்டு பேர் வீடு வாடகைக்கு கேட்பதுபோல கொள்ளையடிக்க வந்துள்ளனர். வந்தவர்களில் ஒருவர் பெண் வேடமிட்டது தெரியவரவே, சுதாரித்த ராதாகிருஷ்ணனும் அவரது மனைவியும் கூச்சலிட்டுள்ளனர். அதனால் கொள்ளையர்கள் தப்பிக்க முயன்றனர். இருப்பினும் அருகில் உள்ளவர்கள் இருவரையும் பிடித்து பாண்டிபஜார் போலீஸில் ஒப்படைத்தனர்.
இருவரிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில், கொள்ளையடிக்க வந்தவர்கள் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரகாஷ் (27) மற்றும் பழனியைச் சேர்ந்த சுஜந்த் (20) எனத் தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன்பு சுஜந்த், ராதாகிருஷ்ணன் வீட்டில் வேலைபார்த்துள்ளார். வயதானவர்கள் வீட்டில் இருப்பதை நோட்டமிட்ட சுஜந்த், கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக, பெண் வேடமிட்ட சுஜந்த், வாடகைக்கு வீடு கேட்பதைப்போல பிரகாஷுடன் சென்றுள்ளார். சி.சி.டி.வி கேமரா பதிவிலிருந்தும் தப்பிக்கத்தான் இந்த வேடம் என்று போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான பிரகாஷ், இன்ஜினீயர் என்றும், சுஜந்த் கூலித்தொழிலாளி என்றும் தெரியவந்துள்ளது
Friday, 9 March 2018
தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தைக்கு மூச்சுத் திணறுவது ஏன்? தவிர்ப்பது எப்படி? மருத்துவ விளக்கம்
தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தை ஒன்று, மூச்சுத்திணறி தன் பிஞ்சு உயிரைவிட்ட பரிதாபம், விழுப்புரத்தில் நடந்திருக்கிறது. இதைப் படித்த நொடியில், பல தாய்மார்கள் தங்கள் குழந்தையை ஒரு நடுக்கத்துடன் அணைத்து முத்தமிட்டுருப்பார்கள். இப்படியும் ஒரு விபரீதம் நடக்குமா? அதற்கான காரணங்கள் என்ன? அவற்றைத் தவிர்ப்பது எப்படி? மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ, குழந்தை நல மூத்த மருத்துவர் சீனிவாசன், மூத்த பொதுநல மருத்துவர் ஜோஸ் என மூன்று பேரிடம் கேட்டோம்.

தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத்திணற வாய்ப்பிருக்கிறது!
இன்றைக்கும் வயதான பாட்டிகள் இருக்கிற வீடுகளில், ''பால் கொடுக்கிறப்போ புள்ளைக்குப் புகைச்சல் ஏறிடாமல் பார்த்துக்கொடு'' என்பார்கள். அந்தப் புகைச்சல் அல்லது புரையேறுதல்தான் விழுப்புரம் குழந்தையின் விஷயத்தில் நடந்திருக்கிறது. குழந்தையானது பாலை வேகவேகமாக உறிஞ்சிக் குடிக்கையில், சின்னச் சின்ன இடைவெளிகளில் மூச்சும் விட்டுக்கொள்ளும். பாலை விழுங்குதல், மூச்சுவிடுதல் என மாறி நடக்கையில், மயிரிழை நேரத்தில் பாலானது உணவுக்குழாய்க்குப் பதிலாக, மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடலாம். இப்படி மூச்சுக்குழாய்க்குள் சென்ற தாய்ப்பால், நுரையீரலுக்குள் நுழைந்து கண்ணிமைக்கும் நொடியில் சிசுவின் மூச்சை நிறுத்திவிடலாம். இது ஒரு காரணம். இன்னொரு காரணம், குழந்தை அளவுக்குத் அதிகமாக தாய்ப்பால் குடித்திருந்தால், அந்தப் பாலை எக்களிக்கும். இது, வாந்தியாக வெளியே வராமல் மூச்சுக்குழாய்க்குள் நுழைந்து, நுரையீரலுக்குள் சென்றுவிடும்போது கண்ணிமைக்கும் நொடியில் இறப்பு நேரலாம். இதைத் தொட்டில் மரணம் என்போம். இந்த இரண்டு சம்பவங்களுமே அரிதினும் அரிதாகவே நடக்கும் விஷயம் என்பதால், இளம் அம்மாக்கள் பயந்துவிட வேண்டாம்.

தாய்ப்பால் குடிக்கும்போது பச்சிளம் குழந்தைக்கு மூச்சுதிணறுவதற்கான காரணங்கள் என்னென்ன?
* குழந்தைக்கு உட்கார்ந்து பாலூட்டாமல் படுத்தபடியே கொடுப்பதுதான், குழந்தைக்குப் புரையேறுவதற்கான முதல் காரணம்.
* குழந்தை பால் குடித்து ரொம்ப நேரம் ஆகிவிட்டதே என்று, அரைத் தூக்கத்தில் எழுப்பி பாலூட்டுவது அடுத்த காரணம்.
* குழந்தையானது பால் குடித்து முடித்த பிறகும், கொஞ்சம்தான் குடிச்சிருக்கு என்று கட்டாயப்படுத்தி, வயிறு முட்ட பாலூட்டுவது மூன்றாவது காரணம். இதுதான் குழந்தைக்குக் குமட்டல் வருவதற்கு முக்கியமான காரணம்.
* குழந்தை முழுங்கும் அளவைவிட அதிகமான அளவு பால் சுரந்தாலும், குழந்தை பாலை விழுங்க கஷ்டப்படும்.
* பெரிய மார்பகங்கள்கொண்ட அம்மாக்கள், தங்கள் குழந்தைக்குப் பாலூட்டும்போது, மார்பகம் குழந்தையின் மூக்கின் மேல் அழுத்தினாலும் மூச்சு திணறும்.
* பெரிய மார்பகங்கள்கொண்ட இளம் அம்மாக்கள், படுத்தவாறு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கவே கூடாது. அப்படிப் பாலூட்டும்போது, குழந்தையுடன் சேர்ந்து தூங்கிவிட்டால், அம்மாவின் ஹெவி பிரெஸ்ட்டானது குழந்தையின் மூக்கின் மேல் அழுத்தி விளைவு விபரீதமாகலாம்.
* அன்னப்பிளவு இருக்கும் குழந்தைக்கும் புரையேறுதல் பிரச்னை வரும். இந்த வகை குழந்தையின் அம்மாக்கள், அன்னப்பிளவை ஆபரேஷன் மூலம் சரிசெய்கிற வரை கவனமாக இருக்க வேண்டும்.
* அரிதாக சில குழந்தைகளுக்கு உணவுக்குழாய்க்கும் காற்றுக்குழாய்க்கும் கனெக்ஷன் இருக்கும். இந்தப் பிரச்னை இருக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் குடிக்கும்போது அடிக்கடி புரையேறும். இதன் தொடர்ச்சியாக மூச்சுத் திணறும்.

மூச்சுத்திணறலை எப்படித் தவிர்ப்பது?
* உட்கார்ந்து ஒரு கையால் குழந்தையின் முகத்தில் மார்பு விழாத வண்ணம் பிடித்துக்கொள்ளுங்கள். மறு கையால், குழந்தையின் தலையை அதன் உடம்பைவிடச் சற்று உயர்த்திப் பிடித்து, பால் கொடுங்கள்.
* படுத்தபடி தாய்ப்பால் கொடுப்பதை முற்றிலும் தவிருங்கள்.
* குழந்தை நன்கு விழித்த பிறகுதான் பாலூட்ட வேண்டும்.
* பாசத்தில் குழந்தையின் குட்டி வயிற்றின் கொள்ளளவுத் தாண்டி பாலூட்டாதீர்கள்.
* சில அம்மாக்களுக்கு ஒரு மார்பகத்தில் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் பால் சுரப்பு குறைவான பக்கம் முதலில் பாப்பாவுக்குப் பாலூட்ட ஆரம்பித்தால், அதிகமாகச் சுரக்கிற மார்பிலிருந்து கொஞ்சம் பால் வடிந்துவிடும். இதனால், பாப்பா முழுங்கும் அளவுக்கு மட்டும் பால் சுரக்கும்.
* அன்னப்பிளவு இருக்கும் குழந்தைகளுக்கு, அதைச் சரிசெய்கிறவரை ஒரு பிளேட்போல குழந்தையின் உதட்டில் சொருகி பாலூட்ட வேண்டும்.
* உணவுக்குழாய்க்கும் காற்றுக்குழாய்க்கும் கனெக்ஷன் இருக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டும்போது அடிக்கடி புரையேறும். இதன் தொடர்ச்சியாக மூச்சுத்திணறல் ஏற்படும். இந்தக் குழந்தைகளை உடனே டாக்டரிடம் அழைத்துச் சென்றுவிடுங்கள்.
Thursday, 1 March 2018
ஸ்ரீபிரியா, சினேகன் உள்ளிட்டோர் கமல்ஹாசன் கட்சி பேச்சாளர்களாக நியமனம்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தலைமைப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சினேகன், ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன் அதன் நிர்வாகிகளை மேடையில் அறிமுகப்படுத்தினார். பின்னர் இன்று கட்சியின் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு: மக்கள் நீதி மய்யத்தின் பேச்சாளர்களாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மெளர்யா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரங்கராஜன், பேராசிரியர் ஞான சம்பந்தன், திரைப்பட தயாரிப்பாளர் கமிலா நாசர், இயக்குநர் முரளி அப்பாஸ், தொழிலதிபர்கள் சிவராமன், செளரி ராஜன், நடிகை ஸ்ரீபிரியா, பாடலாசிரியர் சினேகன் ஆகியோரும் பேச்சாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்