Tuesday, 14 November 2017

துமிழும்- கமலும்

மன்னனின் அவையில் கம்பர் அரங்கேற்றம் செய்கையில் #துமிழ் என்ற வார்த்தையை உபயோகிக்க அப்படி ஒரு வார்த்தையே தமிழில் இல்லை என ஒட்டக்கூத்தன் வம்புக்கிழுக்க அதை நிரூபிக்கவில்லை என்றால் சிரச்சேதம் என மன்னன் அறிவித்துவிடுகிறான்.

அது பேச்சு வழக்கென்றும் தன்னோடு வந்தால் இரவுக்குள் தான் நிரூபிப்பதாகக் கம்பன் கூறியதால்
மன்னனும், ஒட்டக்கூத்தன், கம்பன் ஆகிய மூவரும் மாறுவேடமிட்டு மக்களிடம் அவ்வார்த்தை பேசப்படுகிறதா என ஊனாடிக்கேட்டுவர நெடுந்தூரம் வந்தும் எங்கேயும் கேட்டபாடில்லை,

தனக்கு எப்படியும் சிரச்சேதம் நிச்சயமென அஞ்சிய கம்பனோ எல்லாம் வல்ல தன் தமிழ்த்தாயை மன்றாடி வேண்டிக்கொள்ள,

கல்வித்தாய் சரஸ்வதியே தன் கவிக் கம்பனை காப்பாற்ற அவன் தமிழை வளர்க்க வயதான கிழவியாய் உருவெடுத்து ஊருக்கு ஓரமாய் ஒரு ஒதுக்குப்புறக் குடிலில் ஒரு சிறுவனைபோட்டு அடித்துக்கொண்டிருக்க,  அதைக்கண்ட மாறுவேடமிட்ட மூவரும் ஓடிச்சென்று ஏம்மா இந்தச் சிறும் பிள்ளையை இப்படி அடிக்கிறாய்,?  பாவம் அது என்ன செய்தது? எனக்கேட்க.

இந்த பாழாப்போன மன்னனோட ஆட்சியில மழையே பெய்யாம பஞ்சமா கெடக்கு, இதுல இருந்த கொஞ்சோண்டு #துமிழை யும் கீழ ஊத்திட்டான், இப்போ நான் குடிக்க துமிழுக்கு எத்தனை தூரம் இந்த வயதான உடம்பை வைத்து நடந்து சென்று கொண்டு வருவது.?  ஆத்திரம் வரத்தானே செய்யும்.

எனச்சொல்லி, துமிழென்றால் தண்ணீர் தான், அது பேச்சுவழக்கில் இருந்ததாக மன்னனை நம்பவைத்து கம்பனைக் காத்தாளாம் தமிழ்த்தாய்.

அதுபோலத்தான்……

இந்து தீவிரவாதம், சிறுவர்களிடமும் கத்தியை கொடுத்திருக்கு என்று உளறிய
கமலையும்  இந்து சிறுவர்களீக வேடமிட்டு கைகால்களில் விபூதி பூசி கமல் போட்டோவை குத்த செய்து சினிமாவை மிஞ்சி நடித்து
காக்கிறார்கள் அவர் ரசிகக் கண்மணிகள்.

#என்னத்த சொல்ல.
ராசாதுரியன்.

No comments:

Post a Comment