Friday, 17 November 2017

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

#தீரன்_அதிகாரம்_ஒன்று

#நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கு ராயல் சல்யூட்டோடு அவர்களுக்கு சமர்ப்பனம். K Ambethkar

#நாம ரவுடிங்க கிட்டருந்து மக்கள பாதுகாக்குற போலீஸ் வேலைய விட்டுட்டு அரசியல் வாதிகள்க்கு அடியால் வேலதானேசார் பாக்குறோம்.

சிவக்குமார் சூர்யா கார்த்தி என அனைவரும் போலீசாக, அதுவும் நேர்மையான உண்மையான காவல்துறையாக, தற்போது நாச்சியாரில் ஜோதிகாவும்.

நடித்திருக்க,  நேர்மையான போலீஸ் என்றாலே அது சிங்கம் சூர்யா தான், குழந்தைகள்கூட சொல்லும். அடுத்ததாக சிறுத்தை கார்த்தி.

ஆனால் தீரன் திகாரம் ஒன்றோ வேற லெவல்.

ஒரு உண்மையான நேர்மையான காவல்துறை அதிகாரி, அவன் பணியில் வாழ்வில் சந்திக்கும் சிக்கல்கள்,எதிர்ப்புகள், காதல்,கல்யாணம்,
அதிகாரிகளின் ஆதரவு, மேலதிகாரிகளின் எதிர்ப்பு, அரசியல்வாதிகளின் தலையீடு, காவல்துறைக்கு ஒதுக்கப்படும் படிச் சம்பளம், அவர்களுக்கே பாதுகாப்பின்மை,

இவை அத்தனையும் தாண்டி, மக்களுக்கான பணியில் எந்தவித ஆதரவும் இல்லாத நிலையில் அதே கொலைகாரர்களால் ஒரு எம்எல்ஏ இறந்தவுடன் ஏற்படும் மாற்றம்,  என அத்தனைக்கும் நடுவில்,   குற்றவாளிகளைத்தேடி வருடங்களாக அலைந்து அவர்களைப் பிடித்தால் சரியான சாட்சிகள் இல்லை என விடுதலை செய்யும் நீதிமன்றமும் சட்டமும், மனித உரிமை என கூவி வரும் அரைக்கிறுக்கர்கள்.

என உணவு உடை உறக்கமின்றி குடும்பம் குழந்தைகளை மறந்து, அத்தனையும் தாண்டி அவர்களை பிடித்துக் கொடுத்த பின் அவர்களுக்கான சரியான பாராட்டுதல்களோ பதக்கமோ பதவி உயர்வோ இன்றி  சாதாரண துறைகளுக்கு மாற்றப்படும் அரசியல் தலையீடுகள் .
என, எந்த ஆர்பாட்டமோ, பஞ்ச் டயலாக் பொன்ற சினிமாத்தனம் இல்லாமல்,  செதுக்கி இருக்கிறார், இயக்குநர் வினோத்.

கார்த்திக்கு காக்கி சட்டை மிகப்பொருத்தமான தேர்வு.  மிகச்சரியாய் தனக்கான பாத்திரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment