அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பழமைவாய்ந்த பத்ரகாளியம்மன் கோவிலில் பூசாரிகள் பல ஆண்டுகளாக உண்டியலில் இருந்து நூதன முறையில் கொள்ளையடித்து வந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. 1500 ஆண்டுகாலம் பழமைவாய்ந்த இந்த கோவிலில் நீண்ட நாட்களாகவே பணம் திருடுபோவதாக புகார் இருந்து வந்தது. இதனையடுத்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆராய்நதபோது பூசாரிகள், குச்சியில் பசையை தடவி உண்டியலில் இருந்து பணத்தை திருடுவது தெரியவந்தது.
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் தான் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. உண்டியலில் நடக்கும் திருட்டு குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கிராம மக்களின் புகார் ஆகும். இதனால் திருட்டில் பூசாரிகளுக்கு மட்டுமில்லாமல் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கும் என்பது அவர்களது குற்றச்சாட்டாக உள்ளது
No comments:
Post a Comment