Monday, 27 November 2017

ஹே ராம் HEY RAM

ஹே ராம் - (HEY RAM)

இந்திய சினிமா தன் நூறு ஆண்டுகளை கடந்துபயணித்துக் கொண்டுஇருக்கிறது.ஆண்டுதோறும் தன் வெளியீடுகளைஅது அதிகரித்துக் கொண்டு தான்இருக்கிறது.சினிமா தன்னை வளர்ச்சிப்பாதையில் முன்னெடுத்து செல்ல எண்ணிக்கைபடங்கள் தேவை இல்லை.என்றேனும் சில படங்கள்வரும்.அவை ஓடாத படங்கள் அல்ல.மக்களின்ரசனையை அதிகமாக எடை போட்டுவிட்டுஎடுக்கப்படுபவை.2000 ஆண்டு வெளிவந்துஅரசியல் கட்சிகள்,மக்களின் பேராதரவில்தோற்கடிப்பட்ட ஹே ராம் படம் பற்றிய ஒரு அலசல்.தமிழில் இதற்கு பிறகேனும் இப்படத்தையாரையாவது எழுத இது தூண்டும் என்றநம்பிக்கையில் ஆரம்பிக்கிறேன்.

கமல்ஹாசன் இதுவரை நடித்த படங்களை ஒருதராசில் வைத்தால், தன் எல்லா படங்களை ஒருதட்டிலும், ஹே ராமை ஒன்றிலும் வைக்கலாம்.இதுவரையில் வந்த தமிழ் படங்கள் அல்ல,இந்தியசினிமாக்களில் கூட  இவ்வளவு தீர்க்கமாய் ஒருபடம் வந்தது இல்லை.படத்தில் ஒரு வரியோ,ஒருகாட்சியோ,ஒரு கதாபாத்திரமோவீணடிக்கப்பட்டதாகதோன்றவில்லை.இப்படத்தையும்காந்தியப்போலவே நாம் ஒதுக்கிவைத்துஉதாசீனப்படுத்தியது தான் இப்படத்திற்கு நாம்செய்த நன்மை

 
எழுத்தாளர் சுஜாதாவின் வரிகளோடு இதைஆரம்பிக்கலாம் 

                             “உண்மை சம்பவத்தின் சாயலில்ஒரு கற்பனைக் கதையைப் பின்னுவதில்சங்கடங்களும் சந்தோஷங்களும் உள்ளன. ஜேஎஃப் கே, டே அஃப் த ஜக்கால் (JFK. Day of the Jackal)போன்ற படங்களுடன் இதை ஒப்பிட முடிகிறதுசங்கடங்கள் இவை - உண்மை சம்பவங்களைஅதிகம் திரிக்க முடியாது முக்கியமான சம்பவமைல் கற்கள் அசைக்க முடியாதவை என்பதுஉலகமே அறியும். சாகேத்ராமன் கொன்றான்என்று சொல்ல முடியாது. ஆனால் காந்தியைகொல்ல முயற்சித்தவன் சாகேத்ராமன் என்கிறஅளவுக்கு உண்மையுடன் விளையாடலாம்.உண்மைச் சம்பவத்தை சார்ந்து படம்பண்ணுவதில் சந்தோஷங்களும் உண்டு. படமாநிஜமா என்கிற பிரமிப்பை ஏற்படுத்தலாம்.”

                                                

படம் கமலின் குரல் பதிவோடுஆரம்பிக்கிறது,கே.பி அவர்களின் உதவியாளர்அனந்துவை வாழ்த்தி, வருடம் 1999 எனகாட்டப்படுகிறது.இப்போது நடப்பது அனைத்துமேப்ளாக் & வொயிட்டில் காட்டப்படுகிறது.ஓர் நபர்நுழைய,ஓர் வயதானவர் கிடத்தப்பட்டுஇருக்கிறார்.இருட்டைப்பற்றி நுழைந்த மருத்துவர்வினவ,எழுத்தாளர் சாகேத் ராம் (கௌதம்கந்தடை),தன் தாத்தா எப்போதுமே இருட்டைத்தான்விரும்புவார் என தெரிவிக்கிறார்.மருத்துவர்முனாவர் (அப்பாஸ்) மஹாத்மா காந்தி தூங்கும்போது கூட வெளிச்சம் இருக்க வேண்டும் என்றுவிரும்புவாராம் என்கிறார். “என் தாத்தாமஹாத்மாவெல்லாம் கிடையாது,ஆனா ஒரு நல்லஆத்மா” என்கிறார் எழுத்தாளர்.படம் முழுக்கவேகாந்திக்கும், சாகேத் ராமிற்குமான தொடர்பு வந்துகொண்டே இருக்கிறது.





இனி படத்தின் கதை இவ்வாறாகஆரம்பிக்கிறது.இது உண்மையில் நிகழ்ந்ததாஎன்கிற கேள்விக்கு இதை விட எளிதாய் பதில் தரமுடியாது. 89 வயதான சாகேத் ராம் (கமல்) எதையும்பேசவில்லை. எழுத்தாளர் சாகேத் ராம்மருத்துவரிடம் இவ்வாறாக சொல்கிறார்,” என்தாத்தா என்கிட்ட நிறைய பேசுவார்.அவர் சொல்றகதை எல்லாமே FIRST PERSON SINGULAR தான். ஒருஊர்ல ஒரு ராஜா இருந்தார்னு சொல்லமாட்டார்.நான் இருந்த ஊர்லஒரு ராஜா இருந்தார்னு சொல்வார்.எது நிஜம்,எதுஇவரா சேர்த்துண்டதுன்னு சொல்லமுடியாது.என்னோட அடுத்த நாவலுக்கு இவருசொன்ன கதை தான். BIOGRAPHYயா FICTIONஆன்னு சொல்ல முடியாத மாதிரி ஒரு கலவை.ஆகஇனி காட்சிப்படுத்தடும் ஒவ்வொரு காட்சியுமேநிகழ்ந்து இருக்கலாம்,இல்லை கற்பனை ஆகவும்சேர்க்கப்பட்டு இருக்கலாம்.

கதை இந்தியாவில் நடக்கிறது.பிரிக்கப்படாத,பிளவுபடாத 1946 இல் இருந்தஇந்தியா.அம்ஜத்தும்(ஷா ருக் க்ஹான்),சாகேத்ராமும் மொஹெஞ்சதாரோவில் வேலை செய்யும்தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.படத்தின் கலர்டோன் முற்றிலும் மாற்றப்படுகிறது.படத்திற்குமுதன் முதலில் எடுக்கப்பட்ட ஷாட் இது தானாம்.Mr. Wheeler "IT's PACK UP TIME" என்பார்.சினிமாவில்பார்க்கப்படும் நம்பிக்கைகளுக்கு எதிராகஎடுக்கப்பட்டு இருக்கும்.சற்றே கோபமுறும்அம்ஜத்தின் characterization அதன் இறுதி வரையில்தெளிவாகவே இருக்கிறது. அடுத்த ஒருவசனத்தில் பதிவு செய்யப்பட்டுவிடுகிறது, “கிரிஸ்து பிறப்பதற்கு பல ஆயிரம் வருஷம்முன்னால்,கழிவு வசதிகள் வேணும்னு நினைத்தநாகரீகம்,குழந்தைகள் விளையாட பொம்மைவேண்டும் என நினைத்த நாகரீகம்,நம்மள மாதிரிபெரியவங்க விளையாட ஆளுக்கொரு சாமிவேணும்னு நினைத்த நாகரீகம் அல்ல”. கமலின்பகுத்தறிவு  சாட்டை சுழல தொடங்குகிறது.

            

இந்தியா-பாகிஸ்தான் பிரிவால் கலவரம்வெடிக்கும் சூழல் உருவாகிறது.தொல்பொருள்வேலைகள் நிறுத்தப்படுகிறது.அடுத்தகாட்சி Archaeological Society of India Recreational Club, Karachi யில் நடக்கிறது.பிரிவினை பற்றிஓவ்வொருவரும் தம் கருத்தைமுன்வைக்கின்றனர்.சாகேத் ராம் பிரிக்கப்படும் இந்தியாவை விரும்பவில்லை.லால்வானி(ஷௌரப்ஷுக்லா) ஒரு சிந்தி தொழிலதிபராககாட்டப்படுகிறார். அம்ஜத்தின் மனைவிநபீஸா (இராவதி ஹர்ஷே) சாகேத்ராமிற்கு ராக்கி கட்டிவிட வேண்டும்என்கிறாள்.நபீஸாவிற்கும் ராமிற்குமான சகோதர பாசம் இக்காட்சியில் சொல்லப்படுகிறது.”எப்படிலால்வானி,அம்ஜத் எல்லாம் ஓர் திராவிடமொழி பேசுகிறீர்கள் என Mr.Brightகேட்கும் போது.எல்லோரும் ஒன்றாய்மெட்ராஸ் காலேஜில் படித்ததாய்கூறுகிறார். தன் தந்தை கார்பெட் விற்கதமிழகம் சென்று உள்ளதாகாவும்,அவர்மனைவி ஆம்பூர் என்றும்கூறுவார். படத்தில் எல்லோரும் தமிழ்பேசாமல்,சிலர் மட்டுமே பேசுவர்.அதிலும்ஒரு லாஜிக் தேவை என்பதர்காக இது.மதத்தை விட நட்பு மேலானது என “ராமர்ஆனாலும்,பாபர் ஆனாலும்” பாடல்ஒலிக்கிறது.முதல்முறையாக பியானோ  இக்காட்சியில்வருகிறது.படம் முழுக்கநாயகன் பியானோ  வாசிக்கும் காட்சிகள்இடம்பெறுகிறது.

சாகேத் ராம் தன் மனைவி அபர்னாவை(ராணிமுகர்ஜி) பார்க்க கல்கத்தாவிற்கு வரும்சமயம்,அங்கு கலவரம் வெடித்துஇருக்கிறது.மொஹம்மத் அலி ஜின்னாஹ்வின்DIRECT ACTION DAY - Great Calcutta Killings of august 16th காரணமாக கல்கத்தாவில் கலவரம் வெடிக்கிறது.சுஹ்ராவர்தியும் இஸ்லாமியர் என்பதால் இதை அவர் கண்டுகொள்ளவில்லை என்கிறார் டாக்சி டிரைவர் முஸ்லீம்கலவரக்காரர்கள் மத்தியில் அல்த்தாஃப் என்னும்தையல்காரனையும் பார்க்கிறான் சாகேத்.கார்செல்வதற்கு மக்களை ஒதுங்கசொல்லிவிட்டு,அந்த காரின் பின் கண்ணாடியைதாக்குகிறான்.இவனது கதாப்பாத்திரம் ஒருbackstabbing என்றும் இன்னமும் முடியவில்லைஎன்பதும் அடுத்த சில காட்சிகளில் சொல்வதற்குஇது.கலவரத்தின் காரணமாக எல்லாக் கடைகளும்பூட்டிக்கிடக்கிறது.

அபர்னா ஒரு ஆசிரியையாக கல்கத்தாவில்வசிக்கிறாள்.அபர்னா சாகேத்துக்கு ஒரு தந்திவந்து இருப்பதாக சொல்கிறாள்.சாகேத்அலட்சியமாக என்ன தந்தை நலமில்லையா இல்லஇறந்தேவிட்டாரா என்று கேட்கிறார்.அவன் தன்குடும்பத்தை விட்டு வந்துவிட்டார் என்பதுபுலப்படும்.அவர் பின் இறப்பதும் இவன் வாழ்வில்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்காது.எங்கேதன்னை பிரிந்து சென்று விடுவானோ எனபெங்காளி அபர்னா வருத்தம்கொள்கிறாள்.சாகேத் அதைதெளிவுபடுத்துகிறான்.அபர்னாவும்,சாகேத்தும்இணைந்து பியானோ வாசிக்கின்றனர்.



”நீ பார்த்த பார்வைக்கு ஓர் நன்றி” பாடலுக்கு முன்வரும் பெங்காளி கவிதையை அப்ரனாவாசிக்கிறாள்.அதன் ஆங்கில மொழியாக்கம்இவ்வாறாக வருகிறது.

Moonlight in the sky on the forest trail The scent of the leopard.My heart is like a deer in the silence of the night which way am I going The silvery shadow of leaves on my body no more deer anywhere As far as I go I see the moon bent like a sickle cutting the last gold And deer-grain then sinking slowly into the darkness Of  all the sleep in the eyes of a hundred does.     

இருவரும் காதல் கொள்கின்றனர். சாகேத் தமிழ்முறைப்படி தாலி கட்டுகிறான்,அவளுக்குபெங்காளி முறைப்படி திலக்கும் இடுகிறான். 

 

அபர்னா தன் காலில் அணிந்து இருக்கும்மெட்டியை எடுத்து சாகேத்தின் சுண்டு விரலில்இடுகிறாள்.வெளியே சென்று ஏதேனும் வாங்கிவர சாகேத் செல்கிறான்.அபர்னாகலவரக்காரர்களை எண்ணி பயம் கொள்ளத்துவங்குகிறாள்.

தான் பயணிக்கும் வழியில் ஒரு சீக்கியபெண்ணை ஒரு மனிதன் துரத்துகிறான்.”உனக்குவெக்கமா இல்ல” என்று சாகேத் திட்டும் போதுஇல்லை என சொல்லிவிட்டு மீண்டும்துரத்துகிறான்.பின்னால் ஒரு பெரிய கூட்டமேதுரத்துவதை கண்டு சாகேத் அவனது பைக்கில்ஏற்றி அவளை அவளது வீட்டில்விடுகிறான்.அவர்களின் வீட்டில் தொலைபேசிஇருக்கிறதா என வினவி ,HARDWICKஎன்கிற ஆங்கிலேய உயர் அதிகாரியிடம் நிலைமையை பற்றிபதறுகிறான்.இங்கே சாகேத் பேசுவது எதுவும்காட்டப்படவில்லை.ஹார்டுவிக்கின் பதில்சொல்லும் தோணியிலேயே சில விஷயங்கள்சொல்லப்படுகிறது.   

  

மிகவும் ரிலாக்ஸாகவே,தேநீர் அருந்திக்கொண்டேஎவ்வித பதபதைப்பும் இல்லாமல்  பதில்கூறுகிறார். “ஆமாம்.ஆனால் நாம் என்ன பண்ணமுடியும்.இந்துக்களுக்கு நாங்கள்  வெளியேறவேண்டும்.இஸ்லாமியர்களுக்கு நாட்டைஅவர்களுக்கு தர வேண்டும்.நீங்கள் ஏன்காங்கிரஸ் அலுவலகத்திற்கோ,மஹாத்மாவிற்கோ ஃபோன் செய்யகூடாது?”மறுபக்கம் அழைப்பு துண்டிக்கப்படுகிறது.

தான் காலம் தாழ்த்தி வந்துவிட்டதை சாகேத்ராமால் உணரமுடிகிறது. அவனது பியானோவின்மீது அவன்கட்டிப்போடப்படுகிறான்.அல்த்தாஃபும்,அவனோடுவந்தவர்களும் அபர்ணாவைகற்பழிக்கிறார்கள்.சாகேத்தை கட்டிப்போட்டுவிட்டுநிற்கும் ஒருவனை,அல்த்தாஃப் உள்ளேஅழைக்கிறான். அதற்கு அவன் “i prefer this one"  என சாகேத்தை பார்க்கிறான்.சாகேத்தின் பின்தொடை பகுதியை லேசாய் தடவிக்கொடுக்கிறான்.ஓர் இன சேர்க்கை பற்றிமுதன்முறையாக ஒரு சினிமா பேசுகிறது.தன்கையாலாகாத தனத்தை எண்ணி சாகேத்பியானோ பொத்தான்களில் முகம் புதைத்துஅழுகிறான். துப்பாக்கியை வைத்துக் கொண்டுசாகேத்தை மிரட்டுகிறான்.ஒரு பாலியல்வன்முறையின் உச்சம் வசனம் இல்லாமல் உணரவைக்கப்படுகிறது.அவனுக்கு சம்மதிப்பதுப் போல்சாகேத் கைகள் விடுபடும் வரை அமைதி காத்துபின் அவனை தாக்குகிறான்.கழுத்துஅறுபட்டு,ரத்தம் பீறிட அபர்ணா இறந்துபோகிறாள்.தன் துப்பாக்கியில் தோட்டாக்களைபோட்டுக்கொண்டு அவர்களை பழி வாங்ககிளம்புகிறான்.அந்த அடுக்குமாடி குடியிருப்பின்ஒவ்வொரு தளத்திலும் வன்முறை நிகழ்த்தப்பட்டுஇருக்கிறது.


அடுத்து வரும் எல்லா காட்சிகளுமேவன்முறையின் பொருட்டு  RED SHADE இல்காட்டப்படுகிறது. ஒரு மசூதியின் மேல் பகுதிஎறிவது போல் காட்டப்படுகிறது. பின்னர் அதுஅதற்கு பின்னால் நடக்கும் ஒரு கலவரத்தைகாட்டுகின்றது.சாகேத் ராம் அல்த்தாஃப்பின்கடைக்கு வருகிறான்.

அது எறிந்து கொண்டு இருக்கிறது.ஒரு இஸ்லாம்குடும்பத்தை சீக்கியர்கள் இரக்கமின்றிகொல்கின்றனர்.சிறுவர்கள் தீயில்போடப்படுகிறார்கள்.அந்த பகுதியே தீக்கிறைஆக்கப்படுகிறது.அல்த்தாஃப் ஒரு வீட்டின் பைப்வழியாக கீழே இறங்குகிறான்.


 

சூழ்நிலை தன்னை இவ்வாறு செய்ய வைத்ததாகஉயிருக்கு மன்றாடுகிறான்அல்த்தாஃப்.அவனையும்,தடுக்க வருபவரையும்சுட்டுக் கொல்கிறான் சாகேத். சாகேத்தின் கோபம்இன்னமும் அடங்கவில்லை.இருவர் இணைந்துஒரு வயதான இஸ்லாமியரை கத்தியால் குத்திக்கொண்டு இருக்கின்றனர்.சாகேத் துப்பாக்கியுடன்வருவதைக்கண்டு அவனை இஸ்லாம் மதத்தைசேர்ந்தவர் என எண்ணி ஒருவன் ஓடிவிடுகிறான்.மற்றொருவன் “அல்லா உ அக்ப “என்கிறான்.அந்த இஸ்லாமியரை இவன் சுடமுயற்ச்சிக்கும் போது,”அல்லா,உங்களை என்னைகாப்பாற்ற அனுப்பி இருப்பதாக சொல்கிறார். தன்பேத்தியை அழைக்கிறார்.சாகேத் உள்ளேநுழைந்து பார்க்கும் போது,

 

ஓர் பார்வையற்ற சிறுமி தன் கையில் ஒருபொம்மையோடு தன் தாத்தாவை அழைத்தபடிஇருக்கிறாள்.சாகேத் ஒரு கணம் செய்வதறியாதுதிகைக்கிறான்.அந்த இடத்தை விட்டு சென்றுவிடுகிறான்.அந்த சிறுமி அவள் தாத்தாவின்உடலை தொட தன் விரல்களில் படிந்தது என்னஎன்பதை சொல்லாமல் அக்காட்சி முடியும்.இந்தகாட்சி முழுவதுமே ராஜாவின் இசைவன்முறையின் ஊடே மென்சோகத்தைபுகுத்தியபடி இருக்கும்.

சாகேத் அடுத்து ஸ்ரீ'ராம்' அப்யங்கரை(அதுல்குல்கர்னி) சந்திக்கிறான்.அப்யங்கர் சாகேத்மார்பில் இருக்கும் உபனயனத்தைபார்க்கிறார்.சாகேத் கையில் இருக்கும்துப்பாக்கியையும்,சாகேத் வகுப்பில் தன்னைவிடமூத்தவன் என அப்யங்கர் உறுதிசெய்கிறான்.பின்னர்  அபிவாத்யய் கூறுகிறான்சாகேத்திடம்


“Abhivadaye vishwamitra aagamarshana kaushika, triyashreya pravaranvitha kaushika gothra, aapasthambha sutra, yajusshakha adhyayee, Shriram Abhyankar sharma nama aham asmibhu”(Of Kaushik, son of Vishwamitra…Of Kaushik, thrice blessed…Of Kaushik, the high priest of Yajur Veda… Of Kaushik, I bear my lineage. I am Shri Ram Abhyankar.)

 

ஒரு தமிழ் படத்தில் அபிவாத்யய் வரும் காட்சிஇதுதான் முதல் முறை.

தான் நிர்வகிக்கும் ஒரு பத்திரிக்கையைசாகேத்திற்கு கொடுக்கிறார் அப்யங்கர். இங்குஇருக்கும் மக்களுக்கு நீ யார் என தெரியவேண்டும் எனக்கூறி சாகேத்தின் நெற்றியில்திலகம் இடுகிறான்.சாகேத் அந்த இடத்தை விட்டுவிடுபட ஓடுகிறான்.அலரல் சத்தம்ஓய்ந்தபாடில்லை.ஒரு சீக்கிய கும்பல் ஒருஇஸ்லாம் சிறுவனை வெட்டிக் கொல்கிறது. இங்குபிரச்சனை இந்துவா,இஸ்லாமா என்பது இல்லைஎன்பது மெல்ல மெல்ல சாகேத்திற்கு விளங்கஆரம்பிக்கிறது.தீவரவாதம் என்பது ஒருமதத்திற்குள் வரையறுக்கப்படவில்லை என்பதுஅவனுக்கு புரிபடுகிறது.

பிணங்களின் நடுவே அடுத்த நாள் விடிகிறது.

முனிசிபாலிட்டி வண்டிகள் உடல்களை ஏற்றிச்செல்கிறது.யானைப்பாகன் கொல்லப்பட்டுயானை ஒன்று தனித்து விடப்பட்டுஇருக்கிறது.அதன் நிலையோடு தன்னை ஒப்பீடுசெய்கிறான் சாகேத்.தன் அபர்னா இறந்த பின்அதே நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறான்.


அப்யங்கர் தந்த முகவரியில் போலீஸ் யாரையோதேடிக்கொண்டு இருக்கிறது.நேற்றைய வேட்டைஎப்படி இருந்தததென அப்யங்கர் வினவ.சாகேத்பேச முடியாமல் தடுமாறுகிறான்.முன்னர்காட்சிகளில் அம்ஜத் தமிழ் பேசுவது போல், இதில்அப்யங்கர் தமிழ் பேசுகிறான் ,தான் தஞாவோர்மராட்டியன் என்கிறான்.படத்தில் தமிழர்கள்அல்லாது தமிழ் பேசும் ஒவ்வொருவருக்கும் ஏதோஒரு காரணம் வழியசேர்க்கப்படுகிறது.விஸ்வரூபத்திலும் இதுபோன்று பார்க்க இயலும்.கமல் ஒரு நடிகனாய்கதை தேர்வில் பல படங்களில் தோற்த்துஇருக்கலாம்.ஒரு இயக்குனராய் என்கும் தவறுஇழைப்பதில்லை. ”நீங்களெல்லாம் கொல்வதற்குஏதோவொரு காரணம்சொல்லிக்கொள்கின்றனர்,கடவுள்,மதம்என”.சாகேத்தால் அவன் கொலைகளைசகித்துக்கொள்ள முடியவில்லை.  சாகேத்தின்கொலைகளை நியாயப்படுத்துகிறான்அப்யங்கர்.இதற்கு எல்லாம் காரணம் காந்தி தான்என மூளை சலவை செய்கிறான் அப்யங்கர்.காந்தி பற்றி ஒரு தவறான புரிதலை சாகேத்திற்கு விதைக்கிறான் அபயங்கர்.முதலில் இருந்தேமுதலில் இருந்தே khilafat movement,போன்றவற்றை பயன்படுத்தி அந்த பச்சைசெடியை மரமாக்கினான் என்கிறான். கொலைசெய்வது தவறில்லை என்றேஆரம்பிக்கிறார்.குற்றத்திற்கு தான் தண்டனையேஅன்றி கடமைக்கு இல்லை;கொலை குத்தம்எனில்,யுத்தமும் குத்தம் தானே.பட்டாளத்துக்காரன்செய்யும் கொலை எப்படி குற்றம் ஆகும்.இது ஒருசிவில் போர் என்கிறான் அப்யங்கர்.

ஒரு மாட்டுவண்டி கவிழ்ந்து கிடக்கின்றது.இறந்தமாட்டின் வயிற்றுப்பகுதியில் ஒரு மிருகம் ருசிபார்த்துக் கொண்டு இருப்பதைசாகேத் காண்கிறான்.போகிற போக்கில் ”இந்தபுத்தகத்தை படி.இது தடை செய்யப்பட்டபுத்தகம்.அட்டையை பிரிக்காம படி.இத எழுதியதுவீர் ச....” என்பதோடு பொலீஸ் அவனை சுற்றிவளைப்பது போல் காட்சிபின்னப்பட்டுள்ளது.இதற்கு பெயர் தான்உண்மையோடு விளையாடுவது.யார் எழுதியதுஎன்பதனை முழுதாய் சொல்ல ஒரு நொடிகூட ஆகபோவதில்லை. 



கல்கத்தாவை விட்டு கிளம்புகிறான் சாகேத்.அவன்நேசித்த அவனது பியானொ அந்தரத்தில்தொங்குகிறது.பொருட்களை கூடபொருட்படுத்தாமல் அங்கிருந்துகிளம்புகிறான்.அவனது அபர்னாவைப்போலவே,அவனது பியானோ விழுந்து இறக்கின்றது,.பாகன் அற்ற .இவன் மீண்டும் தன் நிலையோடுஅதை ஒப்பிட்டு வருந்தத் தொடங்குகிறான்.


 

கதை அங்கு இருந்து ஸ்ரீரங்கம் நகர்கிறது. தமிழ்பாடலான "பதங்கொண்டு நடத்தும்வாழ்க்கைமாவுத்தன் அவனும்இன்றிகதங்கொண்டு துழைக்கும் வெய்யஅங்குசம் அதுவும் இன்றிமதங்கொண்டவேழம் போலத் திரிகிறேன் பண்டுநான்குவிதங்கொண்ட மறைகள் போற்றும்அரங்கமா நகர் உளானே!"ஒலிக்கின்றது.தான் அடி வைத்து நடத்தும்வாழ்க்கை  மாவுத்தனால் அடக்கப்படாத,உடம்பைகுத்தி வழிநடத்தும் அங்குசம்இல்லாத  மதங்கொண்ட யானை போல திரியும்வாழ்க்கை” என அர்த்தம் தொனிக்கும்வரிகள்.அபர்னா என்னும் தன் பாகனைதொலைத்து விட்டு யானையாய் சாகேத்உணர்கிறான்.பெண் பார்ப்பதற்காக பாஸ்யம்மாமா (வாலி), வசந்தா அத்தை ஆகியோரோடுசெல்கிறார்.தூணோடு ஒரு யானை கட்டப்பட்டுஇருக்கிறது.சாகேத்தும் அதே போல் பிடியில்சிக்கிக்கொள்கிறான்.அவனுக்கு இதில் விருப்பம்அறவே இல்லை என்பதை “அப்பாவும்,மனைவியும்இறந்து 6 மாதம் ஆகலை,அதுக்குள்ள பொண்ணுபார்க்க போறோம்” என்கிறான்.மணப்பெண்மைத்திலியாக (வசூந்த்ரா தாஸ்) ,கதை முழுக்கமுழுக்க அக்ராகாரத்தில் பயணம்செய்கிறது.வடக்கில் நடந்தேறிய கலவரம் பற்றியசுவடு கூட இங்கு இல்லை.முழுக்க முழுக்கஅய்யங்கார் குடும்பமாய் காட்சி அளிக்கிறது.தனியா தெரிவது மைத்திலியின் நீல நிர லென்ஸ்கண்கள் மட்டுமே. மைத்திலி சாகேத் காலில்விழுந்து வணங்குகிறாள்.சாகேத் தன் சுண்டுவிரலில் இருக்கும் அபர்னாவின் மெட்டியைகவனித்து வருந்துகிறான்.


வீட்டின் மாடியில் சாகேத் தன் நண்பர்களோடுஉரையாடுகிறான். தன்திருமணத்தையும்,இந்தியா,பாகிஸ்த்தானின்பிரிவை விவாகரத்து என்றும் ஒப்பீடு செய்கிறான்சாகேத். சாகேத்தை தவிர மற்றவர்கள்பாகிஸ்தான் பிரிந்தது சரி என்ற தொணியில்பேசுகிறார்கள்.செறங்கை வெட்டி எறிவது போல்பாகிஸ்தானை ரேட்கிலிஃப்  பிரித்து விட்டதாய்சொல்கிறான். பாகிஸ்தானை ஒரு வேண்டாதஒன்றாகவே இங்கு இருப்பவர்கள் நினைத்துஇருந்தனர். 

 
காந்தியை நக்கல் செய்வதை அங்கு யாரும்விரும்பவில்லை.அங்கு இருப்பவர்களில்சாகேத்தை தவிர மற்ற எல்லொரும் காந்தியைதெய்மாகவே பார்த்தனர், கல்கத்தாகலவரங்களுக்கு காந்தி தான் காரணம் எனசாகேத் ஏற்கனவே முடிவு செய்கிறான்.அவர்கள்இருவரௌம் பஎசும் காட்சியில் கூட.இதை ஒருவேண்டாத பந்தமாகவே பார்க்கிறான்சாகேத்.சாகேத்திற்கும்,மைத்திலிக்கும் ஆனதொடர்பு விலகியே இருக்கிறது, முதல் இரவில்மைத்திலி உடை மாற்ற உள்ளே செல்ல,அங்கேஒரு பல்லி தற்செயலாய்,அவள் மீது விழுகிறது.அவள் அலறுகிறாள்.சாகேத்திற்கு அதுஅபர்னாவின் அழு குரலாய்கேட்கிறது.அபர்னாவை காப்பாற்றுவதாய்எண்ணி கதவை தட்டுகிறான்.பின்,அங்கேமைத்திலி இருப்பதைக் கண்டு தன் தவறைஉணர்கிறான்.


 

இயல்பு நிலைக்கு வருவதற்காக தண்ணீரைஎடுத்து ஊற்றிக்கொள்கிறான்.அவனால் கொலைசெய்யப்பட்ட எல்லொரும் அவன் முன்னால்வருவது போன்றதொரு பிரம்மைஏற்படுகிறது.ரத்தத்தில் நகர இயலாதுதத்தளிக்கும் பல்லியாய் அவன் தன்னைஉணர்கிறான்.

 ”தி ஸ்டேட்ஸ்மேன் ” நாழிதழ் பாகிஸ்தான்விடுதலை அடைந்ததை காட்டுகிறது.நாள் 14-ஆகஸ்ட்-1947.சாகேத் மீண்டும் கல்கத்தாவிற்குவருகிறான்.தன் குடும்பத்தை விட்டு தனியாககல்கத்தா வந்து இருக்கிறான்.அவன் வாழ்ந்தகுடியிருப்புக்கு செல்கிறான்.கல்கத்தாமுற்றிலுமாய் மாறிஇருக்கிறது.அபர்ணாவும்,பியானொவும் அவன்கண் முன்னால் வந்து போகின்றன.அவன் தங்கிஇருந்த வீட்டிற்கு செல்கிறான்.அங்கு புதிதாய் குடிவந்து இருப்பவரிடம் அபர்ணா வரைந்த காளியின்படத்தை கேட்டு வாங்கிக் கொள்கிறான்.படத்தைகைகளில் சுமந்தபடி தெருவில் நடண்டுசெல்கிறான்.அவனால் கொல்லப்பட்டவர்கள்அவன் கண் முன் வந்து செல்கின்றனர்.


சுஹ்ராவர்திக்கும்,காந்திக்கும் எதிராய்கோஷங்ளை எழுப்பி ஒரு கும்பல் செல்கிறது.இந்த காட்சியில் தான் காந்தி கதாப்பத்திரம்(நஸ்ருதீன் ஷா) அறிமுகம் செய்யப்படுகிறது.

 

கடந்த ஆண்டு கல்கத்தாவிலும்,பெங்காலிலும்நடந்த கொலைகளுக்கு சுஹ்ராவர்திதானேகாரணம் என சாகேத் வினவுகிறான்.அவரும் வேறுவழியின்றி ஒப்புக்கொள்கிறார்.சுஹ்ராவர்திக்கும்,காந்திக்கும்எதிராய் கோஷம் எழுப்பியவர்கள்,சட்டென்றுஅவர்களுக்கு ஆதரவாய் கோஷங்கள்எழுப்புகிறார்கள்.சாகேத் ராம்குழப்பத்தில்,குழுமியிர்ருவர்களைக் கண்டுவெறுப்படைகிறான். அங்கிருந்து கடந்துசெல்ல,ஒளியின் மறைவில் இருந்து அப்யங்கர்வெளிப்படுகிறான்.மனிதர்களுக்கு நியாபகம்என்ற ஒன்று இல்லவே இல்லைஎன்கிறான்.அடுத்து வரக்கூடிய அப்யங்கரின்வசனம் அப்படியே  ”இந்த ஆட்டு மந்தைஆட்டுப்பால குடிக்கற இந்த தாத்தா பின்னாலபோயிக்கிட்டு இருக்கு.தாத்தா பக்ரீத்த கொண்டாடபோயிக்கிட்டு இருக்கார்னு தெரியாது, இந்த மடமந்தைக்கு ”.

 
ஒரு முதியவர் இந்துக்களும் இஸ்லாமியர்களும்சகோதரர்கள் என கத்திக்கொண்டுவருகிறார்.கோபமுறும் அப்யங்கர்முரண்பாடானவற்றை சொல்லி சகோதரர்கள்என்று சொல்லுகின்றான். ஜெர்மனி-இங்கிலாந்து;சீனா-ஜப்பான்;ஆடும்-கறிவெட்டுபவரும் சகோதரர்கள் தானே என்பது போல்பேசுகிறான். 

 

அந்த நள்ளிரவில் இந்தியாவிற்கு சுதந்திரம்கிடைக்கிறது.

சாகேத் ராம் மறுபடியும் தமிழகம்வருகிறான்.சாகேத்திற்கும் மைத்திலிக்கும்இடையேயான இடைவெளி அப்படியே தான்இருக்கிறது.எப்படியேனும் ராமிடம் பேசவேண்டும்என்பதாய் மைத்திலி பேசுகிறாள். "அம்மா முகத்தகூட பாக்க முடியலையேனு வருத்தமாஇல்லையா"என கேட்க.போட்டோ இருக்கிறதே  எனபதில் வருகிறது.கல்கத்தா பற்றியும்,அபர்ணாபற்றியும் பேசும் போது தான் சாகேத் ஆர்வமாய்பதில் தருகிறான்.அபர்ணா வரைந்த காளியின்படத்தை மைத்திலிக்கு தருகிறான்.மைத்திலி தான்வரைந்த ஆண்டாள் படத்தை சாகேதிற்குதருகிறாள்.இந்த காட்சியில் வரும் ஆண்டாள்என்பது ஒரு அழகியல் குறியீடு.

 

சாகேத் தன் மனைவியோடு மகாராஷ்டிராகிளம்புகிறான்.

 காந்தி பற்றிய புரிதல்இருவருக்கும் அதிகம் வேறுபடுகிறது.தென்இந்தியாவில் இருப்பவர்கள்கலவரம்,பிரிவினை,போன்றவற்றின் பாதிப்புஅற்றவர்களாகவே இருக்கிறார்கள்.அவர்கள்காந்தியை பெரிதும் நம்பினர் .இப்போது இங்குநடக்கும் பிரச்சனைகளுக்கு வடஇந்தியர்கள்கொடுக்கும் முக்கியத்துவமும் இது போலத்தான் . ரேட்க்ளிப் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானைபிரித்த போது,தென் இந்தியர்களுக்கு அதுபெரிதாய் எவ்வித பாதிப்பையும்தரவில்லை.மைத்திலி எதிர் வாதம் செய்யும்போதெல்லாம் அது சாகேத் ராமிற்கு அவள் மேல்அதிக அன்பை கூட்டுகிறது.காந்தியின்குரங்குகளுக்கு சாகேத் நக்கல் செய்ய,மைதிலிஅதை  தீர்க்கமாய் மறுக்கிறாள்.

அப்யங்கர் தன்னை ராமகிருஷ்ண பாண்டேவாகஅறிமுகம் செய்து கொள்கிறான்.சாகேத் ராமின்திருமண முடிவு பற்றி அவனுக்கு இஷ்டம் இல்லைஎன்பது இக்காட்சியில்புலப்படுகிறது.மகாராஜாவோடு வேட்டைக்குசெல்வது பற்றி பாண்டே கூறுகிறான். கொலைசெய்வதில் என்ன ஆனந்தம் இருக்கிறது எனமைத்திலி கேட்க,அதற்கு சாகேத் ராம் பதில்அளிக்கிறான்.ஒரு ஓநாய் ,நம் குழந்தையைகொள்வது நியாமா எனக்கேட்கும் பொது,ஓநாயின்பார்வையில் இருந்து பார்த்தாள் தவறில்லை எனஅபயங்கர் கூறிவிட்டு வண்டி கிளம்புகிறது.

 

கொலைக்கு கொலை தீர்வாகாது என்பதில்மைதிலி உறுதியாக இருக்கிறாள்.கலவரத்தில்பாதிக்கப்பட்டவனின் பார்வையில் இருந்துபார்த்தால் கொலையின் நியாயம் புரியும்என்பதாய் அப்யங்கரின் பதில் அமைகிறது.

சாகேத் தனுக்கு கொல்ல வேண்டும் என்கிறவேட்கை கிடையாது.ஒரு ஆர்வம் மட்டுமே எனசொல்ல,

மகாராஜாவும்,அப்யங்கரும் அதை பற்றி பேசிகொள்கின்றனர்.சாகேத்தை ஏதோ  ஒன்றிற்குஅவர்கள் தயாற்படுத்தவே எல்லாம் நடக்கிறது.காரில் மகாராஜா,அபயங்கர்,சாகேத் எல்லோரும்செல்கின்றனர்.ஓர் இடத்தில்ரயில்வேகாரர்கள் பூட்டி இருக்கிறார்கள்."எல்லாகதவுகளையும் பூட்டி விட்டனர்.இதை மட்டும்திறந்து என்ன செய்ய?"என்பதேகேட்கிறார்.வல்லபாய் பட்டேலின்அறிவுரைப்படி,மகாராஜாக்கள் அனைவரும்தங்கள் நிலங்களை இந்திய அரசாங்கத்திற்குஒப்படைக்க வேண்டும் எனஇருந்தது.மகாராஜாக்களும் இனி பப்படம்சாப்பிட்டு உயிர் வாழ வேண்டும் என நக்கல்அடிக்கிறார் மகாராஜா.பப்படம் விற்கும் ஒருஏழையிடம் அதை அதிக விலை கொடுத்துவாங்குகிறார்.இவ்வளவு பணத்தை இவனுக்குஎண்ணக்கூட தெரியாது என நக்கல்அடிக்கிறார் மகாராஜா.பப்படம் விற்பவன்சிரித்துக்கொண்டே தான் பணம் எண்ணுவதைதான் தொழிலாக கொண்டேன் கராச்சியில்என்கிறான் .சாகேத் அந்த குரல் கேட்டு திரும்பிபார்த்தி அதிர்கிறான்.பப்படம் விற்பவன் எவனதுபழைய பணக்கார நண்பன் லால்வாணி .பாகிஸ்தானில் இந்துக்களுக்கு ஏற்பட்ட துயரம்கண்டு கோபமடைகிறான்.லால்வானியின் குடும்பம் என்னவானது என கேட்க ரயிலில் குவியலாய் பிணங்கள் வந்ததை பற்றி சொல்கிறான்.

விஜயதசமி விமர்சையாககொண்டாடப்படுகிறது.அபயங்கர் வற்புறுத்தலால்சாகேத் மது அருந்துகிறான்.பத்து தலைராவணனை ராமர் வாதம் செய்யும் காட்சிகாட்டபடுகிறது.இசையில் தொடங்குதம்மா பாடல்பின்னணியில் ஒலிக்கிறது  .


காந்தியை கொல்ல திட்டம்தீட்டப்படுகிறது.மகாராஜாவின் வரிகள் அப்படியே 

"Gentlemen, if our Hindu soul is to survive, this Mahatma must die. The misfortune of this Hindu nation is its worst enemy is a practicing Hindu! Right from beginning, he hasbeen taking their side and neglecting the people of his own religion. For centuries we have been worshiping the valor and its accompanying instruments He now wants us tochange our form of worship and pray to a new God, himself, and a new religion, Ahimsa.My brave men, it should be done as a symbolic act and not as the revenge. But to show the world and the country what a Hindu is capable of "  

சாகேத்தின் மூளை அதன் கட்டுப்பாட்டை இழந்துஇருந்தது.அபயங்கர் முன்னால் சொன்ன  "பச்சைசெடிக்கு தண்ணி ஊத்தி மரமா ஆக்கிட்டான்"என்பது விசுவலாய் காட்டப்படுகிறது.அது ஒருபச்சை முள் கள்ளி செடியாய் வளர்கிறது.



 

காளியின் படமும்,ஹிட்லரின் படமும் ,விநாயக் சவர்காரின் படமும் அங்கே இருக்கறது .அப்யங்கரும்,சாகேத் ராமும் காந்தியை கொல்லநியமிக்கப்படுகிறார்கள்.மகாராஜா ஒரு ராம் தான்இந்த காரியத்தை செய்ய வேண்டும் என எழுதிஇருக்கிறது என்கிறார். காந்தியை உண்மையில்கொன்றது ஒரு ராம் என்பது வேறு. காந்தி,மூன்றுகுரங்குகள்,பாகிஸ்தான் கொடி எல்லாம்காட்டப்படுகிறது . 

 

துப்பாக்கியின் சத்தத்தில் அது அப்படியேசிதறுகிறது .பின்னர் ஜெர்மனியின் ஸ்வஸ்திக்காட்டப்படுகிறது.அது மெல்ல உருமாறிஹிந்துக்களின் ஸ்வஸ்திக் காட்டப்படுகிறது.ஜெர்மனியின் யூத மக்களோடு இங்குஇருப்பவர்கள் ஒப்பீடு செய்யப்படுகிறார்கள்.








 

ஸ்வஸ்திக்  மீண்டும் உருமாறி ஒரு தாமரைவடிவத்தை அடைகிறது .

சாகேத்தும் மைதிலியும் கலவி கொள்கிறார்கள்.

  

அந்த கட்டில் அப்படியே உடைந்து மொஹெஞ்சதாரோவின்  மணல் மேடுகளில்விழுவதாய் காட்சிப்படுத்தப்படுகிறது .மைதிலிஒரு பெரிய துப்பாக்கியாய் உருமாற்றம்பெறுகிறாள்.

சாகேத் பல நாட்கள் கழித்து பியானோவாசிக்கிறான்.இம்முறை அதில் ஒரு உற்சாகம்இல்லை.ஒரு விதமான மூர்க்கத்தனமாய்காணப்படுகிறான்.  

மறுநாள் போலோ மாதிரியான விளையாட்டுநடத்தப்படுகிறது. சாகேத்தும் ,அப்யங்கரும் கலந்துகொள்கிறார்கள்.அப்யங்கரின் குதிரை அவன் மீதுவிழுந்து ,அவன் விபத்துக்கு உள்ளாகிறான்.அந்தகுதிரையை மகாராஜா சுட்டு வீழ்த்துகிறார்.சாகேத்அப்யங்க்கரை சந்திக்க மருத்துவமனைக்குசெல்கிறான் .அபர்ணாவின் மெட்டியை  சாகேத்கைகளில் அணிந்து இருப்பான்.அதைமைதிலியின் கைகளில் அணிகிறான்.அதன்சாட்சியாய் ,முதல் முறையாய் மைத்திலிக்கு நீபார்த்த பார்வைக்கு ஓர் நன்றி பாடலின் பிஜிம்வாசிக்கப்படுகிறது .

.ராம் மட்டும் தனியே அப்யங்கரை பார்க்கசெல்கிறான் .ராமிடம் காந்தியை கொள்வதற்கானதுப்பாக்கி வழங்கப்படுகிறது.


உரிய காலம் வரும்போது தந்தி வரும் என்றும்சொல்லி அனுப்புகிறான் .படம் முழுக்க ராமாயணம் தொடர்புபடுத்த படுகிறது.அபயங்கர் இருக்கும் அறையில் ஆஞ்சநேயர் படம் இருக்கிறது .தன் உடல் செயல் இழந்து விட்டதாகவும்,பரிசுத்தா ஆமா மட்டுமே மீதம் இருப்பதாகவும் சொல்கிறான்.


 

படம் மீண்டும் இன்றைய தினத்திற்கு வருகிறது.அது அழகே ப்ளாக்அண்ட் வொயிட்டில் காட்டப்படுகிறது .வயதானசாகேத் ராமை மருத்துவமனைக்கு ஒரு வண்டியில்அழைத்து செல்கிறார்கள்.நாள் டிசம்பர் 6,பாபர்மசூதி இடிக்கப்பட்ட தினம்.நகரம் கலவரமாய்கிட்டக்கின்றது. இவர்களின் வண்டி மாற்றுதிசையில் திருப்பி அனுப்பப்படுகிறது .கலவரம்வெடிக்கிறது.

இவர்களது வண்டி போலிசால் இப்ராஹீம்(நாசர்)நிறுத்தப்பட்டு ,இவர்கள் அருகில் இருக்கும்ஒரு குழியில் தங்கவைக்கப்படுகிறார்கள்.வயதான சாகேத் ராமின் செயற்கைகாற்று கருவியோடு குழியினுள்வைக்கப்படுகிறார் .   சாகேத் மீண்டும் பழையகாட்சிகளை நினவு கூர்கிறார்.
சாகேத் தன மனைவியோடு சொந்த ஊரில்இருக்கிறன்.காலம் கனிந்து வருதற்காக தன்னைதயார் படுத்திக்கொண்டு இருக்கிறான் காந்தி ஒருகோரமான  நிலையில் ஒரு படத்தில் காட்சிஅளிக்கிறார்.காதி செல்லும் இடங்களை ஏற்ல்லாம் குறிக்கும் இதிய வரைபடம் ஒன்றும் இருக்கிறது .


 

அப்யங்கர் இறந்து விட்டதாகவும், காந்தி ஒரு மாதம் டெல்லியில் இருப்பதாகவும், காந்திக்கு சேவைசெய்ய இது தான் சரியான தருணம் என்றும் தந்திவருகிறது.மைத்திலி கர்ப்பம் தரித்து இருப்பதுபின்னர் தான் ராமிற்கு தெரிய வருகிறது.சாகேத்கிளம்ப தயார் ஆகிறான் . வாத நோயால் பாதிக்கப்பட்ட வசந்தா அக்காளின்கணவர் குரல் கேட்டு விரைந்து செல்கிறான்.அவர்இறந்து இருப்பதை கண்டு வருந்துகிறான்.வசந்தாஅக்காளையும்,மைத்திலயையும் நினைத்துவருந்துகிறான்.ஒரு லெட்டர் எழுதி வைத்துவிட்டு,அங்கு இருந்து கிளம்பி டில்லி வருகிறான். 


டில்லியில் ஹோட்டல் மரினாவில் அரை எண் 43இல் சாகேத் ராம் தங்குகிறான் .அங்கு கோவர்தன்  (கொல்லப்புடி மாருதி ராவ் )என்னும் நபர் அறிமுகமாகிறார் அவன் ஹோட்டலில் தங்கும்நபர்களுக்கு மாது சப்ளை செய்யும் நபராக வருகிறார். சாகேத் ராம் அங்கு இருந்து பிர்லா ஹவுசிற்கு செல்கிறான் அங்கு காந்தி நேரு,ஆசதிடம் பேசுவது போல் காட்சி அமைக்கட்டு இருக்கும்.காந்தி அமர்ந்து இருக்கும் இடத்திற்கு பின் புறம் உள்ள அறையில் புகைப்படம் எடுக்க அங்கு இருக்கும் நபரிடம் லஞ்சம் தருகிறான் சாகேத்.ஆடுகளை பராமரிக்கும் அவனோ ஏற்கனவேஒருவர் அப்படித்தான் இங்கு வந்ததாக சொல்கிறான்.காந்தி பேச இருக்கும் மைக் வேலை செய்யாததால் அவரது உதவியாளர் காந்தி பேசுவதை சத்தமாக உரைக்கிறார் . சிலரின் நடமாட்டம் சாகித் ராமை சந்தேகம் வர வைக்கிறது 

 . 

ஒருவனை "நாத்து " என்ற பெயரில் ஒருவன் அழைப்பது சொல்லப்படுகிறது . சாகேத் ராமும் நாத்துரம் கோட்சேவும் மோதிக் கொள்வது போல் ஒரு அமைக்கப்பட்டு இருக்கும்சுவற்றில் ஒருவன் வெடி வைத்து கூட்டத்தை கலைக்க முயற்சிசெய்கிறான். அவனை கைது செய்கிறது போலிஸ். நாள் 20.ஜனவரி.1948.இந்த ஒரு காட்சியில் மட்டும் படம் உண்மை சம்பவங்களில் எவ்வளவு நெருங்கி செல்ல முடியுமோ அவ்வளவு சென்று இருக்கும் . காந்தியை கொள்வதற்காக நாதுராம் விநாயக் கோட்சேவும்,அவர்தம் கூட்டாளிகளும் அரங்கேற்றிய செயலை ஒரு மூன்றாவது நபர் பார்ப்பதாய் படத்தில் வரும்.மதன்லால் ,ஷங்கர்,திகம்பர்,விஷ்ணு,கோபால்கோட்சே,நாத்துராம் கோட்சே,நாராயண்ஆப்தே அடங்கிய குழு மகாராஷ்த்ரியாவில்இருந்து பிர்லா பாவணிற்கு காந்திய கொலை செய்ய வந்து இருந்தனர்.சுவற்றில் வெடி வைத்தது மதன்லால்.அது பெரிய பாதிப்பைஏற்படுத்தவில்லை என்பதால்அவர்கள் அந்த திட்டத்தை கை விடுகின்றனர் . மதன்லால் மட்டும் போலீசில்  மாட்டிக் கொள்ள மற்றவர்கள் தப்பி விடுகின்றனர் . மதன்லால் பின்பு போலீசோடுஅவர்கள் தங்கி இருந்த மரினா ஹோட்டலுக்கு மற்றவர்களை காட்டிக் கொடுக்க வருகிறான் . அதற்குள் இங்கு இருந்தவர்கள் கோட்செவோடு தப்பி விடுகின்றனர்.பின்னர்நாத்துராம் காந்தியை 30.ஜனவரி சுட்டுக்கொன்றது வரலாறு 

அங்கே மைதிலியின் தந்தை உப்பிலி அய்யங்கார் (கிறிஸ் கர்னாட் ) சாகித் ராமை சந்திக்கிறார். ராமின் பெரியப்பாவும் ;அக்காளும் இறந்து விட்டதாய் தெரிவிக்கிறார்.தந்தியை வைத்து இங்குவந்ததாகவும் தன் நண்பர் கோயல் (ஓம் பூரி ) ராமை காந்ஹியிடம் பேச அனுமதி வாங்கித் தருவார் என்றும் கூறுகிறார். ராம் அங்கு இருந்து கடந்து மரினா ஹோட்டலுக்கு செல்கிறான். அங்கேபோலிஸ் நாத்துராம் கோட்சேவை தேடி வருகிறது. அவனிடம்    இருக்கும் துப்பாக்கி   மாட்டி விடக்கூடாது என்பதற்காக அதை அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும் ஒரு சோடா வண்டியில்வைக்கிறான் . போலிஸ் சென்று விட,அதற்குள் அந்த சோடா வண்டி கிளம்பி விடுகிறது. அந்த ஆசாத் சோடா பேக்டரிக்கு கோவர்தனின் உதவியுடன் செல்கிறான். அங்கு அவனது பழைய நண்பன் அம்ஜத் கானை   

அம்ஜத் : Jinna's daughter சொந்த மகளே இந்தியாதான் தன நாடுன்னு இங்கேயே தங்கிட்டாங்க.நான்                        காந்தியோட மகன் .இங்க தான்இருப்பேன் நான் காந்தியோட மகன் இங்க தான்                                           இருப்பேன்.இது என் நாடுராம்:உன் சின்னாவோட பாகிஸ்தானுக்கு போங்க. 

அம்ஜத் :எங்கேடா போக சொல்ற ??

ராம் : போதும்.போதும் எல்லோரும் கண் காது போங்கோ.

அம்ஜத் :அப்ப உன் ஜாதிக்கு பிரதிநிதியா வந்துஇருக்கியா ?? do you remember my father ? அவரும்                               சாகல.கொன்னு போட்டாங்க ஹிந்துஸ்.

ராம் :அவ சாகல.கொன்னு போட்டாங்க.பலதந்தைகள்,மனைவிகள் ஹிந்துக்கள கொன்னமாதிரி              கொன்னு போட்டாங்கமுஸ்லீம்ஸ்அம்ஜத் : ஏன் ஏன் .உன் அபர்ணாவைசெத்த  கோபமா ?? 

ராம் :தேவைப்பட்டால் அதுவும் செய்யும் .

அம்ஜத்:come here.அப்ப உன் துப்பாக்கி முஸ்லீம்ஸ்கொல்ற துப்பாக்கி 

 அம்ஜத் :தப்பிக்க,சுடுவே இல்லையா ?

                                           ராம் : of course .

கல்கத்தா கலவரத்தில் அபர்ணா இறந்துவிட்டதை சொல்கிறான் அம்ஜத் இப்போது குடும்பத்தோடுகராச்சியை விட்டு இங்கேயே வந்து விட்டதாய்சொல்கிறான்

 .அம்ஜத்திடம் தன் பர்ஸை தொலைத்து விட்டதாக சொல்கிறான்.அங்கே ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருப்பதால், அம்ஜத் இருவரையும் உள்ளே இருக்க சொல்கிறான். ராம் தேட வந்துஇருப்பது துப்பாக்கி என்பது பின்னர் தான் அம்ஜத்திற்கு தெரிய வருகிறது.ராம் அவர்களை தாக்க முயல,சோடா பேக்டரி உரிமையாளர் ஜலால் கொல்லப்படுகிறார்.அங்கே கலவரம் வெடிக்கிறது.கோவர்தன் சாரி என்கிற இந்து கும்பலிடம் சோடா பேக்டரியில் இருக்கும் இஸ்லாமியர்கள் பற்றியும்,அவர்கள் வைத்து இருக்கும் ஆயுதங்கள் பற்றியும் சொல்லி விடுகிறான்.எதற்காக துப்பாக்கி கொண்டு வந்தாய் என அம்ஜத் கேட்க.ராம் இவாறு பதில் அளிக்கிறான் .படத்தின் மிகவும் முக்கியமான ஒரு உரையாடல் இப்போது வருகிறது.இறுதியில் ராம் திருந்துகிறான் .மைதிலி முன்பு சொன்னது போல்,பழி வாங்குதல் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது என்பதை ராம் புரிந்து கொள்கிறான் .

 
அம்ஜத் : துப்பக்கிய எதுக்கு இங்கு கொண்டுவந்தே 

ராம் : நான் கொண்டு வரல.உங்க மாவோட சோடாதரக் கொண்டு வந்தது.சரி நான் கிளம்புறேன் .

அம்ஜத் : முட்டாள்,செத்துப்போவாய் , i do not know why you are carrying this gun ,but you will need my help toget out of here .

 
ராம் : i do not think so .யாரோட உதவியும் தேவைஇல்லை.நானே தப்பிசுடுவேன்.

 ராம் : கைபர் கால்வாய் வழியா வந்த விதேசி நீ.700 ஆண்டுகள் எங்களை ஆண்ட  திமிர்உங்களுக்கு

    

அம்ஜத் : அப்ப ,நான் பொறக்கலியே நான் உன்கூடதான பொறந்தேன்  .

அங்கு தோட்டாக்களின் சத்தம் அதிகமாகிஇருந்தது. காந்தியால் அமைதியாய் இருந்த தேசம்இப்போது ராமால் மீண்டும் ஆரம்பித்து உள்ளதுஎன்கிறான் அம்ஜத் .அபர்ணாவை கொன்றுநீங்கள் தான் ஆரம்பித்தீர்கள் என்கிறான் ராம்.

அம்ஜத் : அபர்ணாவை கொன்றதற்காக என்னைமன்னி.என் வாப்பாவை கொன்றதற்காக                                     உன்னை மன்னிக்கிறேன் .or  well அப்ப சுடு.ஒரு முசல்மான கொல்ற சந்தோசத்த நான்                             உனக்கு தர்றேன் . somebody will have to put a full stop to this .

ராம் : ரத்தத்துல புல் ஸ்டாப் வைக்க தான் வந்துஇருக்கேன் .நான் உன்ன கொல்ல வரல..இதுக்கெல்லாம் காரனத்த கொல்ல வந்துஇருக்கேன் . 

எல்லாவற்றிற்கும் காரணம் காந்தி தான் என்பதைதீர்ர்க்கமாய் நம்புகிறான் ராம் .அதற்குள் இங்குசாரியின் (டெல்லி கணேஷ் ) ஆட்கள் சுற்றிவளைத்து விடுகிறார்கள் .அம்ஜத்தை தன தம்பிபரத் என பொய் சொல்கிறான் ராம் .படம்முழுக்கவே ராமாயணத்திற்கான தொடர்பு இருந்துகொண்டே இருக்கும் . அம்ஜத்தா ,பரத்தா என்பதைஅவுத்து பார்த்தா தெரிந்து விடும் என்கிறான் சாரி.அம்ஜத்தை சுத்தியலால் தாக்குகிறார்கள் . ராம்சாரியையும்,மற்றவர்களையும் சுடுகிறான்.அபர்ணாவை இழந்தது போல் ,அம்சத்தை அவன்இழக்க விரும்பவில்லை .அங்கு சூழ்ந்தஇந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களைகாப்பாற்றுகிறான் . ராம் தன் தவறை எண்ணிஅழுகிறான் .

மறுநாள்.மருத்துவமனை முழுக்க சடலங்களாய்இருக்கிறது .அம்ஜத்திடம் பைரவ பற்றிவிசாரிக்கின்றனர் போலிஸ். "ராம் என் அண்ணன் .பைரவ என்ற மிருகத்தை இதற்கு முன் பார்த்ததுஇல்லை " என்கிறான் அம்ஜத் . அம்ஜத் இறந்துபோகிறான் .

ஜனவரி 30 ,பிர்லா ஹுசில் காந்தியைராமும்,அம்ஜத்தின் குடும்பமும் சந்திக்கின்றனர் .

டிசம்பர் 6 ,1999. செயற்கை ஆக்சிஜனும் தீர்ந்து விடுகிறது .என்ன சத்தம் என சாகேத் கேட்க.ஹிந்து முஸ்லிம் கலவரம் என்கிறான் பேரன்சாகேத் ராம் . "இன்னுமா.சொப்பனம்வருகிறது.என்னை எழுப்பு மைத்திலி "எனசொல்லிவிட்டு ராம் இறக்கிறார்  .  இப்ராஹீம் என்கிற இஸ்லாமியரால் தான்இப்போது இவர்கள் எல்லோரும் உயிர்பிழைக்கின்றனர் 

காந்தியும் ,சாகேத் ராமும் பேசிக்கொள்வதாய் ஒரு காட்சி வருகிறது.சாகேத் தன தவறை எண்ணி அழுகிறான். சர்தார் பட்டேலும்,அவரது மகளும்(ஸ்ருதி ) நடந்து செல்கின்றனர் .காந்தியிடம்மன்னிப்பு கேட்க வருகிறான் சாகேத் . 

 

காந்தி அங்கு இருந்து கிளம்ப ,நாத்துராம்கோட்சேவால் மறிக்கப்பட்டு காந்தியைசுட்டுக் கொல்லப்படுகிறார்..காந்தி ஹே ராம் என்னும் வார்த்தைகளை சொல்லாமல் இறக்கிறார்

மௌண்ட்பேட்டன் "காந்தியை கொன்றது ஒரு முஸ்லிம் அல்ல ஹிந்து "என பிர்லா ஹுசில் குழுமி இருப்பவர்களிடம் சொல்கிறார். நேரு உங்களுக்கு எப்படி தெரியும் என கேட்க.."நல்ல வேலை ,அது ஒரு ஹிந்து. இல்லை எனில் இந்த தேசம் இன்னும் சுக்கு நூறாகி இருக்கும் " என்கிறார் .சாகேத் ராம் தன தவறை எண்ணி அழுகிறான்..   

சாகேத் ராமின் இரங்கலுக்கு காந்தியின் கொள்ளுபேரன் ,துஷார் காந்தி வருகிறார் .அவரிடம் பேரன்சாகேத் காந்தியின் செருப்பையும்கண்ணாடியையும்  தருகிறான் .

'அது உங்களுடையது ' என்கிறான். அப்போது செருப்புகள் மற்றும் கண்ணாடிக்கு அடியில் "Gandhiji's slippers and spectacles goes missing" எனும் நாளிதழ் பக்கம் காட்டப்படுகிறது. இருட்டிலேயே வாழ்ந்த சாகேத் ராமின் அறைக் கதவுகளையும் ஜன்னல்களையும் பேரன் சாகேத் ராம் திறக்க உள்ளே பாய்ந்தோடும் வெளிச்சத்தில் சுவற்றில் காந்தியின் சித்திரம் வரையப் பட்டிருப்பதோடு ரகுபதி ராகவ் பாடல் உச்சஸ்தாயியில் ஒலிக்க படம் நிறைவு பெறுகிறது.

ஹே ராமும் உண்மையும் 

உண்மை சம்பவங்களை மையமாக கொண்டதால் ,படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பெயர்கள் கூட சரியாகவே இருக்கும்.முகங்கள் கூட 70% ஒத்துபோவது மாதிரியான முகங்களை தான் தேர்வு செய்து இருக்கிறார்கள் 

1944-48 வரையிலான காலத்தில் மொஹெஞ்சதாரோ ஹரப்பா தோல் பொருள் ஆராய்ச்சியினை நடத்தியவர் மார்டிமேர் வீலர் . 



கல்கத்தா கலவரங்களின் போது அங்கு இருந்த சுஹ்ராவர்தியின் பெயர் சாஹித் .






இந்திய சினிமாவிலேயே இத்தனை நுட்பங்களும் உட்ப்ரதிகளும் கொண்ட திரைப்படம் இதுகாறும் வெளியாகவில்லை என்பது நிதர்சனம். 'நான் நடிகனானதே என் முதல் தோல்வி' என்பார் கமல்ஹாசன். அவரது விருப்பம் இயக்குவதில் தான் இருந்திருக்கிறது. படம் வெளியான காலத்தில் பலரால் புரிந்து கொள்ளப்படவில்லை அல்லது இஸ்லாமிய விரோத திரைப்படம் எனத் தவறாக திரிக்கப்பட்டது. கமல் ஒரு காந்தியவாதி அல்ல. ஆனால் காந்தியின் ரசிகன் என்பதும் இந்து முஸ்லிம் ஒற்றுமை பேண விழைபவர் எனபதும் தெளிவு. இதன் மர்மமும் வசீகரமும் ஆழமும் அளப்பரியது. அதனாலேயே வெளியாகி பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னரும் உலக சினிமா ரசிகர்களை இன்னமும் ஈர்த்துக் கொண்டிருப்பது. இந்தியாவின் மகத்தான நடிகருக்கு அவரது அறுபதாவது பிறந்து நாளில் இப் படத்தை சரியாக 'கற்பதே' நாம் அவருக்கு செய்யும் மரியாதை.ஹே ராமின் ஆடியோ விழாவில் கமல் சொன்னதை இதி நினைவி கூறலாம் "கடந்த காலத்தில் நடந்தவற்றை  திருத்த ஹே ராம் திருத்த முயலப்போவதில்லை.இது போன்றவை மீண்டும் நிகழ வாய்ப்பு உள்ளது என்பதற்கான ஒரு நினைவோலை மட்டுமே . " ஹே ராம்!! 

References

HEAVY REFERENCES FROM
http://theseventhart.info/2008/06/20/hey-ram-an-analysis-part-120/

Other references

http://en.wikipedia.org/

http://www.uiowa.edu/~incinema/HEYRAM.html

http://centreright.in/2013/03/the-false-symmetries-of-hey-ram/#.VFxQB_mUf_M

http://www.planetbollywood.com/Film/heyram.html

http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/Hey_Ram!_14850.html

http://www.rediff.com/news/2000/jan/11diary.htm

http://bharathi-kannamma.blogspot.in/2007/11/blog-post.html

http://www.rediff.com/movies/2000/mar/01box.htm

No comments:

Post a Comment