Friday, 24 November 2017

ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உப்புக்காற்றால் சேதமடைவதை தடுக்கும் பொருட்டு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். இதையடுத்து கடந்த 7 மாதங்களாக ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேர்க்கர் ரசாயன கலவை பூசும் பணி நடந்தது.

இப்பணி கடந்த வாரம் நிறைவடைந்தது. அதன் பிறகு சிலையை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த சாரம் அகற்றப்பட்டது. இதையடுத்து இன்று முதல் திருவள்ளுவர் சிலையை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். காலை 8 மணி முதல் திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் இருந்து படகுகள் இயக்கப்படுகிறது. இத்தகவலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment