Friday, 24 November 2017

ஓ.என்.ஜி.சிக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்..! உறுதியளித்த காவல்துறை

ஓஎன்ஜிசி நிறுவனம் அமைக்க எண்ணெய் கிணற்றினை தடுத்து நிறுத்தவேண்டுமென வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகளின் தலையீட்டால் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

 

ஓஎன்ஜிசியால் பேரழிவு ஏற்பட்டுள்ளது, நிலத்தடி நீர் அடியோடு அழிந்துவிட்டது. காற்று மாசடைந்து மூளை, கல்லீரல் புற்றுநோய் தாக்கி ஏராளமானோர் மரணடைந்து வருகிறார்கள். விவசாயம் பொய்த்துபோய்விட்டது. 2014-ல் அப்போதைய கலெக்டர் மதிவாணன் தலைமையில் விவசாயிகளிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தினர். அப்போது எடுக்கப்பட்ட முடிவில் விவசாயிகளின் கருத்தினை இறுதிப்படுத்தும் வரை திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படாது என்று உறுதிபட தெரிவித்தார். மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் நளினா ஆகியோர் உடனிருந்துதான் முடிவெடுக்கப்பட்டது. மாசு கட்டுப்பாடு வாரியம் வந்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும் வரை ஓஎன்ஜிசி நிறுவனம் டெல்டாவில் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று தீர்மானம் நிறைவேறப்பட்டது. அதனை மீறி சட்டத்திற்கு புறம்பாக திடீரென திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதை அனுமதிக்கக்கூடாது எனவும், கலெக்டர் மூலம் மாசுக் கட்டுப்பாடு வாரியம் கூட்டம் நடத்த வேண்டும். அதுவரை ஓ.என்.ஜி.சி நிறுவனம் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என பி.ஆர்.பாண்டியன் காவல்துறை அதிகாரிகளடம் தெரிவித்தார். காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருவாரூர் மாவட்ட எஸ்.பி அருண் ஓ.என்.ஜி.சி பணிகளை மேற்கொள்ளாது என உறுதியளித்த பின்னர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர் விவசாயிகள்

No comments:

Post a Comment