Saturday, 16 December 2017

பெரியபாண்டியனை சுட்டுக் கொன்றது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியே! :- ராஜஸ்தான் காவல்துறை


  

பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டு என ராஜஸ்தான் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 16, 09:28 PM

சென்னை,

சென்னை கொளத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான நாதுராம் உள்ளிட்ட 2 பேரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கடந்த 8–ந்தேதி அன்று ராஜஸ்தான் மாநிலம் சென்றனர்.

கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், போலீஸ் ஏட்டுகள் எம்புரோஸ், குருமூர்த்தி, முதல்நிலை காவலர் சுதர்சன் ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.  ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ஜெயத்ரன் தாலுக்கா ராமாவாஸ் கிராமம் தான் பயங்கர கொள்ளையன் நாதுராமின் சொந்த ஊர் ஆகும்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள செயல்படாத தொழிற்சாலை கட்டிடம் ஒன்றில் பதுங்கி இருந்த நாதுராமை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் ஆகியோர் தங்களுடன் வந்திருந்த 3 போலீசாருடன் சுற்றி வளைத்தனர்.  இந்நிலையில், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சென்னை நகர உயர் போலீஸ் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கியால் தான் சுட்டுள்ளனர் என்றும், சுட்டது கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் தான் என்றும் கூறினார்கள். ஆனால் அந்த கொள்ளையன் யார்? என்பதை வெளியிடவில்லை.

தனது துப்பாக்கி, தாக்குதலில் கீழே விழுந்தது என்றும் அதனை பெரிய பாண்டியன் எடுத்துள்ளார் என்றும் முனிசேகர் தனது புகாரில் தெரிவித்து இருந்துள்ளார்.  கொள்ளையர்கள் கட்டை மற்றும் இரும்பு தடியால் தாக்கினர் என்றும் முனிசேகர் புகாரில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டு என ராஜஸ்தான் காவல் துறை இன்று தெரிவித்துள்ளது.

Thursday, 14 December 2017

உள்நாட்டில் தயாரான முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ் கல்வாரி கடற்படையில் இணைந்தது! #INSKalvari

உள்நாட்டில் தயாரான முதல் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் கல்வாரியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 


இந்தியக் கப்பற்படைக்கு 3 நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் பணி, மும்பையில் உள்ள மாஸாகான் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டுவந்தது. அந்தவகையில், முதல் உள்நாட்டுத் தயாரிப்பான ஐ.என்.எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல், முறைப்படி கடற்படையில் இன்று இணைந்தது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், ஐ.என்.எஸ் கல்வாரி கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘மேக் இன் இந்தியா திட்டத்துக்கு சிறந்த உதாரணம், இந்தக் கப்பல்’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார். 

67.5 மீட்டர் நீளமும், 12.3 மீட்டர் உயரமும்கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல், டீசல் மற்றும் மின்சக்திமூலம் இயங்கக்கூடியது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் சத்தமே இல்லாமல் இதன் என்ஜின் இயங்கும் என்பதால், மற்ற நாட்டு ரேடாரால் இதைக் கண்டுபிடிப்பது கடினம். அதிக எடைகொண்ட டோர்பிடோக்கள் எனப்படும் ஏவுகணைகளைச் சுமந்துசெல்லும் திறன்பெற்ற ஐ.என்.எஸ் கல்வாரி, கடலுக்கு அடியில் இருந்தாலும் கடலின் மேற்பரப்பில் இருந்தாலும் அவற்றைச் செலுத்தும் திறன்பெற்றது. அதேபோல, பிரான்ஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள எக்ஸோசெட் ஏவுகணைகளும் இந்தக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஒரு ஏவுகணை மூலம் எதிரி நாட்டின் மிகப்பெரிய கப்பல்களைக்கூட சுட்டு வீழ்த்திவிட முடியும். 

Tuesday, 12 December 2017

அபூர்வ ராகம் முதல் காலா வரை: ஃபாஸ்ட் மனிதர் ரஜினியின் ஃபாஸ்டஸ்ட் ப்ரொஃபைல்



அபூர்வ ராகம் முதல் காலா வரை: ஃபாஸ்ட் மனிதர் ரஜினியின் ஃபாஸ்டஸ்ட் ப்ரொஃபைல்...

Monday, 11 Dec, 8.05 pm

’தூங்குவது மாதிரி நடிக்கச் சொன்னாலும்  தூங்குவது போல் ஃபாஸ்டாக நடிப்பார். வேகம்தான் அவரின் அடையாளம்’    -    ரஜினிகாந்தை பற்றி அவரது அபிமான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உதிர்த்த வார்த்தைகள் இவை. அப்படிப்பட்ட ஃபாஸ்ட் மனிதரின் ப்ரொஃபைல் பற்றிய ஃபாஸ்டஸ்ட் பதிவு இது.

சொந்த பெயர்  :    சிவாஜிராவ் கெய்க்வாட்

அப்பா :    ராமோஜிராவ் கெய்க்வாட்

பிறந்த நாள்:    12-12-1950

சொந்த மாநிலம் :    கர்நாடகா

உடன் பிறந்தவர்கள்:    இரண்டு அண்ணன்கள் (சத்யநாராயண ராவ்,                                 நாகேஸ்வரராவ்) ஒரு அக்கா (அஸ்வத்)

சிறு வயதில் பிடித்த விளையாட்டு : கிரிக்கெட், ஃபுட்பால்,  பேஸ்கட்பால்

பள்ளிப்படிப்பு  :    கவிபுரம் கவர்மெண்ட் கன்னட மாடல் பிரைமரி ஸ்கூல்.ஆச்சார்யா பாடசாலை.

பள்ளி படிப்புக்குப் பின் பார்த்த வேலைகள்    :    கூலி, கார்பெண்டர்.

கண்டக்டர் வேலை:    பெங்களூரு டிரான்ஸ்போர்ட் சர்வீஸ்

மேடை நாடகத்தில் வாய்ப்பளித்தவர் :    முனியப்பா

நண்பர் ராஜ்பகதூர் :    மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர தூண்டியவர்.

அங்கீகரித்த இயக்குநர் :    கே.பாலசந்தர்

முதல் படம்  :    அபூர்வ ராகங்கள் (1975)

முதல் ஜோடி  :    ஸ்ரீவித்யா
முதல் பத்திரிக்கை 

பாராட்டு :    தி இந்து (ஆங்கிலம்)

இரண்டாவது படம் : கத சங்கமா முன்னிலைப்படுத்திய

முதல் படம்:    மூன்று முடிச்சு ரஜினியை ஸ்டைல்

மன்னனாக்கிய செயல்:  மூன்றுமுடிச்சில் வரும் சிகரெட் ஸ்டைல்

நேர்மறை ரோல் தந்த இயக்குநர் :    எஸ்.பி.முத்துராமன்

படம் :    புவனா ஒரு கேள்விக்குறி

ஹீரோவாக முதல் படம்:    பைரவி

வாழ்நாள் விருது        :    சூப்பர் ஸ்டார் பட்டம்

சூட்டியவர்:    தயாரிப்பாளர் எஸ்.தாணு

விருது வாங்கி தந்த படம்:    முள்ளும் மலரும்

முதல் விருது  :    தி பெஸ்ட் ஆக்டர்

என்.டி.ஆர். உடன் நடித்த படம்   :    டைகர்

50 வது படம் :    டைகர்

பிடித்த வட இந்திய நடிகர் :  அமிதாப்

தமிழில் ரீமேக் ஆனஅமிதாப்பின் படங்கள்    :    11

1980ல் இவரை நிலை நிறுத்திய படங்கள்: பில்லா, ஜானி, முரட்டுக்காளை

தென்னிந்திய சினிமாவின் டாப் ஸ்டார் பட்டம் வாங்கி தந்த படம்: பில்லா

காமெடி செய்ய வைத்த படம் :  தில்லுமுல்லு

முதல் இந்திப்படம்  : அந்த கானூன்

கெளரவ நடிகராக முதல் படம்  : அன்புள்ள ரஜினிகாந்த்

நூறாவது படம் : ராகவேந்திரர்

தூள் பறக்க வைத்த படங்கள் : ராஜாதிராஜா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை
தமிழின் முதல் லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் படம்: ரஜினியின் ராஜா சின்ன ரோஜா

மைல் ஸ்டோன் மூவி  : தளபதி

சூப்பர் ஸ்டாராய் தக்க வைத்த படம்  :  அண்ணாமலை

ரஜினி திரைக்கதை எழுதியபடம்  : வள்ளி

இந்திய சினிமாவின் ஐகான் ஆக ரஜினியை மாற்றிய படம் : பாட்ஷா

இந்தியில் கடைசி படம்  : அட்டனக் கி அட்டனக்

ஜப்பான் மொழியில் ரீமேக் ஆன ரஜினியின் படம்  : முத்து

தென்னிந்திய சினிமாவில் வசூலில் ரெக்கார்டு பிரேக் செய்த படம்   :   படையப்பா

மனக்கசப்பை தந்த படம்  : பாபா

புத்துணர்வு தந்த படம்   : சந்திரமுகி

ஷங்கருடன் முதல் படம்  : சிவாஜி

இந்திய ஹீரோக்களை வியக்க வைத்த ரஜினியின்  சம்பளம் : 26கோடி- சிவாஜியில்

ரஜினியை புதிய பரிமாணத்தில் காட்டிய படம்:  எந்திரன்

உடல் சிக்கலுக்கு ஆளானது :  ராணா பட  துவக்கத்தில்

ரஜினியை தோற்ற ரீதியில் ரசிக்க வைத்த சமீப படம்  : கபாலி

சினிமா துறையில் ரஜினி செய்த சிறந்த சாதனை  :  கறுப்பு வெள்ளை, கலர், 3டி மற்றும்

மோஷன் கேப்சர் : என நான்கு தொழில்நுட்ப தலைமுறையில் நடித்தது

Saturday, 2 December 2017

தலாக் சொல்லி விவாகரத்து செய்தால் 3 ஆண்டு சிறை!

லாக் சொல்லி விவாகரத்து செய்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தச் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாது.

இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதாவை குளிர்கால கூட்டத் தொடரில் இரு அவையிலும் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இரு அவையிலுமே பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெற்றிருப்பதால், சட்டத்தை நிறைவேற்றுவதில் சிரமம் இருக்காது என்று மத்திய அரசு நம்புகிறது. 

புதிய சட்டத்தின்படி வாயால், எழுத்துபூர்வமாக, வாட்ஸ்அப், கடிதம் என எந்த வழியாக தலாக் செய்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். அதே நேரத்தில் இந்தச் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாது. ஆகஸ்ட் 22-ம் தேதி, உச்ச நீதிமன்றதில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 'முத்தலாக் முறை  சட்ட விரோதமானது. அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது' என்று தீர்ப்பளித்தது. அதற்குப் பின்னரும் முஸ்லிம் பெண்கள் தலாக் சொல்லி விவாகரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்ததையடுத்து, சிறைத்தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இஸ்லாமிய திருமணச்சட்டம் ஆண்கள் தங்கள் மனைவியை மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து செய்ய அனுமதிக்கிறது. 1,400 ஆண்டுகளாக இஸ்லாமில் தலாக் நடைமுறையில் உள்ளது. குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடர் டிசம்பர் 5-ம் தேதி தொடங்கி ஜனவரி 15-ம் தேதி நிறைவடைகிறது

Friday, 1 December 2017

கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

  

கலபுரகி அருகே தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

டிசம்பர் 02, 05:02 AM

பெங்களூரு,

கலபுரகி அருகே தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர்.

கலபுரகி புறநகரில் உள்ள ஒரு மதுபான கடையின் மேலாளர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த கொள்ளையர்கள் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து, அவர் கலபுரகி புறநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.

இந்த நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் ஜே.டி.யூ. படாவனேயில் பதுங்கி இருப்பதாக பரகதாபாத் போலீசாருக்கும், கலபுரகி புறநகர் போலீசாருக்கும் நேற்று முன்தினம் நள்ளிரவில் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பரகதாபாத், கலபுரகி புறநகர் ஆகிய போலீஸ் நிலையங்களின் போலீசார் இணைந்து கொள்ளையர்களை பிடிக்க விரைந்தனர். அப்போது, அங்கு 3 கொள்ளையர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

இந்த வேளையில், போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் 3 பேரும் ஓடினார்கள். போலீசில் சரண் அடையும்படி போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். ஆனாலும், அவர்கள் போலீசில் சரண் அடையவில்லை. மேலும், ஆத்திரமடைந்த அவர்கள் ஆயுதங்களால் போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குதலில் பரகதாபாத் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வாகித், கலபுரகி புறநகர் போலீஸ்காரர்கள் கேசாவா, உசேன் பாஷா ஆகியோரும் காயம் அடைந்தனர். இருப்பினும், அவர்கள் தொடர்ந்து கொள்ளையர்களை கைது செய்ய முயன்றனர். ஆனால் கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்காமல் இருக்க அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதனால், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வாகித் துப்பாக்கியால் கொள்ளையர்களை நோக்கி சுட்டார். இதில், ஒரு கொள்ளையனின் காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அவன் ஓட முடியாமல் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தான். மற்ற 2 பேரும் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து, குண்டு காயம் அடைந்த கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், முகமது இர்பான் (வயது 25) என்பதும், அவர் தொடர்ந்து தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பின்னர், முகமது இர்பான் சிகிச்சைக்காக கலபுரகி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்

மருத்துவமனையில் இறந்துவிட்டது என பிளாஸ்டிக் பையில் கொடுக்கப்பட்ட குழந்தை உயிருடன் இருந்தது கண்டுபிடிப்பு

  

இறந்துவிட்டதாக பிளாஸ்டிக் பையில் வைத்து கொடுக்கப்பட்ட குழந்தையின் உடல் அசைந்ததும் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

டிசம்பர் 01, 06:19 PM

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு நேற்று  இருகுழந்தைகள் பிறந்து உள்ளது. பெண் 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோதே மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்தது. பெண் மற்றும் ஆண் குழந்தையும் உயிரிழந்துவிட்டது என மருத்துவமனை நிர்வாகம் பெற்றோரிடம் பிளாஸ்டிக் பையில் வைத்து ஒப்படைத்து உள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு கொண்டு சென்ற போது ஒரு குழந்தையின் உடல் அசைந்து உள்ளது. குழந்தைகளின் தந்தை பார்த்த போது ஆண் குழந்தைக்கு உயிர் இருந்ததும், குழந்தை மூச்சு விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் ஆண் குழந்தையை உடனடியாக அங்கிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்து உள்ளதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்து உள்ளனர். போலீசாரும் விசாரித்து வருகிறார்கள். மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், மருத்துவமனையில் நவம்பர் மாதம் 30-ம் தேதி இரட்டை குழந்தை பிறந்தது, பெண் குழந்தை இறந்தே பிறந்தது. 22 வாரத்தில் பிறந்த ஆண் குழந்தையை உயிர்காப்பு சிறப்பு பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிப்பதற்கு பதிலாக துரதிஷ்டவசமாக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

 எங்களுடைய கவனத்திற்கு வந்து உள்ளது. இந்த அரிதான நிகழ்வு எங்களுக்கு மிகவும் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

இதுதொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது, குறிப்பிட்ட மருத்துவர் உடனடியாக வேலையைவிட்டு நீக்கப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் தொடர்பில் உள்ளோம், அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து கொடுப்போம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஜேபி நட்டா பேசுகையில், துரதிஷ்டவசமான சம்பவம் ஆகும், இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் டெல்லி அரசிடம் கேட்டுக்கொண்டு உள்ளோம் என கூறிஉள்ளார்

முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம்!...

  

முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது.

டிசம்பர் 01, 08:37 PM

புதுடெல்லி,

இஸ்லாமியர்களிடையே மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றால், 3 முறை ‘தலாக்’ கூறும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை எதிர்த்து முஸ்லிம் சமுகத்தை சேர்ந்த பெண்கள் சிலர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறை, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்ததுடன், இதற்கு தடை விதிக்கும் பொருட்டு சட்டத்திருத்தம் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, வருகிற குளிர்கால கூட்டத்தொடரில், ‘முத்தலாக்’குக்கு தடை விதிக்கும் வகையில், சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. ஏற்கனவே உள்ள சட்டத்தில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்து உள்ளது என தகவல்கள் வெளியாகியது. 

இப்போது முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டவரைவு தயார் செய்யப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. வாய்மொழியாக, எழுத்துப்பூர்வமாக, இ-மெயில் உள்பட தகவல்தொடர்பு உபகரணங்கள் மூலம் உடனடியாக முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் ஆண்டுகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது என சட்ட அமைச்சகத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளையடிப்பு, மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

  

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.23 லட்சத்து 12 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

டிசம்பர் 01, 07:36 PM

நாசிக், 

மராட்டிய மாநிலம் நாசிக், சாதனா டவுன் பஜாரில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். எந்திரம் செயல்படவில்லை என்று இதனை நிர்வகித்து வரும் நிறுவனத்துக்கு  குறுந்தகவல் வந்தது. உடனடியாக அந்நிறுவன ஊழியர்கள், ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பணமும் கொள்ளை போய் இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. 

விசாரணையில், மர்ம ஆசாமிகள் கியாஸ் கட்டரை பயன்படுத்தி, ஏ.டி.எம். எந்திரத்தில் துளைப்போட்டு அதில் இருந்த ரூ.23 லட்சத்து 12 ஆயிரத்தை அள்ளிச்சென்றது தெரியவந்தது. இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடித்த கையோடு, அருகில் உள்ள மற்றொரு ஏ.டி.எம். எந்திரத்திலும் அவர்கள் கைவரிசை காட்ட முயன்றிருக்கின்றனர். எனினும், அவர்களது முயற்சி பலன் அளிக்காததால், அங்கிருந்து தப்பியோடிவிட்டனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் தொடர்ச்சியாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது

அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்கினால் டிஸ்மிஸ்: ராஜஸ்தான் அரசு முடிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசு ஊழியர்கள், திருமணத்தின் போது வரதட்சணை வாங்கினரா, இல்லையா என்பது குறித்து, பிரமாண பத்திரம் வழங்கும்படி, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஊழியர்கள் பொய் சொல்லியிருப்பது தெரியவந்தால் அவர்களை டிஸ்மிஸ் செய்ய முடிவு செய்துள்ளது.
ராஜஸ்தானில் வசுந்தரராஜே தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில், அரசு துறைகளில் பணியில் சேர்ந்த ஊழியர்கள், தங்கள் திருமணத்தின் போது வரதட்சணை வாங்கினரா, இல்லையா என்பது குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

பிரமாண பத்திரத்தில், ஊழியர்கள் பணியில் நியமிக்கப்பட்ட தேதி, துறை ஆகியவற்றுடன், திருமணமானவர்கள் என்றால், திருமணத்தின் போது வரதட்சணை வாங்கினாரா, இல்லையா என்பதை குறிப்பிட்டு, கையெழுத்திட்டு, பெற்றோர், மனைவி மற்றும் மனைவியின் பெற்றோரின் கையெழுத்துடன் வழங்க வேண்டும்.  எதிர்காலத்தில், மனைவி அல்லது அவரது பெற்றோரிடம் வரதட்சணை கேட்டதாக புகார்கள் வந்தாலோ அல்லது நீதிமன்றத்தை அணுகினாலோ, அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது